கோரிப்பாளையம் தர்கா
No data available
தலத்தின் சிறப்பு
பள்ளிவாசலும் தர்காவும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இங்கே அனைத்து மதங்களைச் சார்ந்தோர்கள் தங்கள் நோய்கள் குணமாக வழிபட வருவது வழக்கம்.
வழிபாட்டுக் காலம்
கோரிப்பாளையம் மசூதியில் சில சமயங்களில் 5 நேரங்களுக்குப் பிரார்த்தனைகள் நடைபெறும். பொதுவாக இஸ்லாமிய மசூதிகளில் மாலை நேரங்களில், சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் இரவு நேரங்களில் ஜமாத்தாக (கூட்டுப்பிரார்த்தனையாக) நடைபெறும். மற்ற வழிபாட்டு நேரங்கள் பொதுவாக: 1. பஜ்ர் (அதிகாலை), 2. துஹர் (மதியம்), 3. அஸர் (மாலை), 4. மஃக்ரிப் (சூரிய அஸ்தமனம்) மற்றும் 5. இஷா (இரவு) ஆகும். கோரிப்பாளையம் மசூதியில் இந்த வழிபாட்டு நேரங்கள் பின்பற்றப்படுகின்றன. தர்க்காவில் விசேஷ நாள்களில் கூடுதல் பிரார்த்தனைகள் மற்றும் விழாக்கள் நடைபெறக்கூடும்.
திருவிழாக்கள் விவரங்கள்
| ஆண்டுதோறும் மிலாடிநபியின் நான்காம் நாள் சந்தனக்கூடு திருவிழா இங்கு நடப்பது வழக்கம். |
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
| "பொது ஆண்டு 14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டும், வீரப்பநாயக்கர் கல்வெட்டும் உள்ளன. I-தர்க்காவின் உட்புறக் கல்வெட்டு: 1. சிவமயம் 2. சொஸ்த்தி 3. ஸ்ரீரிமன் 4. மகாமண்ட் 5. லெசுரன் அரி 6. யராயற் தளவிப 7. ரடன் பாசைக்கு 8. தப்புவராயிற் கண் 9. டன் மூவராயற்க 10. ண்டன் கண்ட 11. நாடு கொண்டு 12. கொண்ட நாடு 13. குடாதான் 14. பூறவதெஷ்(ச)ண 15. பச்சிம உத்தறச 16. த்துற்சமுத்தராத்து 17. ப(தி)பாண்டிமண் 18. டலஸதாரீபனா 19. சாரியன் சோ 20. ழமண்டல பிற 21. திட்டாபனாசாரி 22. யன் தொண்ட 23. மண்டல சண்ட 24. ப்பிறசண்டன் இ 25. ழமும்ங் கொங்கு 26. கம்பழமும் யாபர் 27. ணனாயிகப் பட்டண 28. மும் கேசரிவேட் 29. டை கொண்டரு 30. ளிய ராசா(தி)ராச 31. ன் ராசபறமேசுற 32. ன் ராசமாத்தாண் 33. டான் ராசகெம்பீ 34. றன் ராசாகள் நெரு 35. நீ(தி) ராசபரிபாலன் 36. ராசர்கள் நம்பிற 37. கோட்டத்தில் மன் 38. னிய கண்ட 39. ன் யுட்டருக்கு சம 40. நேர் பயங்கரன் 41. துட்டரில் துட்டன் 42. துட்ட நெட்டூரன் 43. துட்ட ராட்டற் தல 44. ர(ரக்) குத்தன் துட்ட பா 45. லன் ஒருகோல்ச் 46. சுலுத்தான் துல்க 47. லுக்கற் தளவிபா 48. டன் ஒட்டிய மோ 49. கந் தவிள்த்தான் 50. ஒட்டிய தளவிபா 51. டன் ஒட்டிய மோ 52. கந் தவிள்த்தான் 53. சமைங்கண்டன் 54. சமைய நாராயணன் 55. அட்ட ஆத்திரிய கம்ப 56. ன் செட்ட முடுமன் 57. னியற்முடியான் சம 58. மன்னன் நாராய 59. ணன் இரவிநாராய 60. ணன் வங்கிஷ் நா 61. ராயணன் வேதகு (ல) 62. பிறதாபன் விரி 63. யப்பிறதாபன் கச்ச 64. ப்பிறதாபன் கனகப் 65. பிறதாபன் கீற்த்தி 66. ப்பிறதாபன் அவ 67. விருது கொண்டே 68. வவிறுதுவா மலை 69. கலங்கிலும் மநங் 70. கலங்காத கண்ட 71. ன் மன்னிய சூரதா 72. ரனாரணமுச் கெந் 73. பீரெனாணமுக சுத்த 74. வீரன் வில்லுக்கு வி 75. சயன் சொல்லுக்கு ச 76. த்திய அரிச்சந்திரன் 77. குடைக்கி கற்னன் 78. தனத்துக்கு குபேறன் அ 79. ழகில் மன்மதன் வீரல 80. ட்சுமி விசையலட்சுமி 81. சந்தானலட்சுமி சய 82. பாக்கிய லட்சுமி தி 83. யாகலட்சுமி போ 84. கலட்சுமி சவூரியலட் 85. சுமி கிரந்தலட்சுமி 86. அட்டலட்சுமியும் பொ 87. ருந்திய மாற்பெ 88. ன் எட்டுத்திக்கு சத்த 89. சாகறமும் ஒருகு 90. டைக்குளாண்டு கொ 91. ண்டருளிய மல்லிகா 92. ச்சிணராயற் தேவ 93. மகாராயற் விருப்பா 94. ச்சிராயற் புசபெலரா 95. யற் வீரநரசிங்கரா 96. யற் ஆனைகுந்தி வெ 97. ங்கிடபதி தேவமகா 98. ராயற்குமரர் நரசி 99. ங்கியராயற் கிருஷ்ண 100. ராயற் ராமராயற் குமர 101. ர் கிஷ்டனராய றவற் 102. கள் காரியத்துக்கு காற் 103. த்தரான விசுனாத 104. னாயக்கற் கிருஷ்ண 105. ப்பனாயக்கற் வீரப்ப 106. னாயக்க ரய்யனவ 107. ற்கள் ராட்சிய பரி 108. பாலினம் பண்ணி 109. செய்தருளி நின்ற 110. சாலிவாகன சத 111. ரசத்துவம் சூசுள 112. க்ஷஇ யட்ருயருக்கு மேல்(செ) 113. ல்லா நின்ற பவ 114. ளூதை மீ சம் யக 115. உ தீ சுபயோக சு 116. பகற்ணமும் கூடி 117. ன சுபதினத்தில் 118. மதுரை வளனா 119. ட்டில் வைகை ந 120. திக்கு வடக்காகிய 121. கோரிப்பாளையம் 122. தில்லி ஒருகோ 123. ல் சுலுத்தாற் பள்" |
அமைப்பு
| பள்ளிவாசலும் தர்க்காவும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இத்தர்க்காவில் இஸ்லாமிய மற்றும் தமிழகக் கட்டடக்கலை அம்சங்கள் காணப்படுகின்றன. |
சுருக்கம்
| கோரிப்பாளையம் பகுதியில் பழைமையான பள்ளிவாசல் ஒன்றும், தர்க்கா ஒன்றும் ஒரே வளாகத்தில் உள்ளன. கல்லால் கட்டப்பட்ட இந்தத் தர்க்கா இஸ்லாமியரது கட்டடக்கலையின் அடிப்படை மரபுகளையும் தமிழகக் கட்டடக்கலை மரபுகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது. இப்போது இத்தர்க்காவின் உட்புறம், வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் உள்ள திருச்சுற்று உள்ளது. அதன் நடுவே கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட ஓர் அறையில் இரண்டு கல்லறைகள் உள்ளன. இங்குள்ள தர்க்கா பொது ஆண்டு 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஏனெனில், இத்தர்க்காவில் அடக்கமாயிருப்பவர் பொது ஆண்டு 1338ஆம் ஆண்டில் மதுரைப்பகுதியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் உத்தௌஜி ஆவார். இவரே இப்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் இதில் அடக்கமாயுள்ளார் என்று கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட கருத்திற்குச் சமகாலத்துச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் இதற்கு மாறான வலுவான கருத்தும் இல்லை. |
பாதுகாக்கும் நிறுவனம்
தமிழ்நாடு வஃபு வாரியம்
கூடுதல் விவரங்கள்
|
தகவல்
EXT
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
| கோரிப்பாளையம் முத்துராமலிங்கத் தேவர் சிலை |
அருகிலுள்ள பேருந்து நிலையம்
| கோரிப்பாளையம் பேருந்து நிலையம் |