பொழுதுபோக்குப் பாடல்கள்
No data available
பாலினம்
பெண், நே.முத்துராக்கு, சி.பஞ்சவர்ணம்
பாடலின் கால அளவு
2:11, 5:06, 1:20, 0:48, 2:48 நிமிடங்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அளவு உள்ளது.
பாடல் விவரங்கள்
இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுவது இல்லை
கூடுதல் விவரங்கள்
இவ்வூரில் கொண்டாட்டப்பாட்டு, உழவுப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கும்மிப்பாட்டு ஆகியவை பாடப்படுகின்றன. உழவுப் பாடல் என்பது மக்கள் வயலில் வேலை செய்யும்போது வெயில் மற்றும் வேலைப் பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடப்படும் பாடலாகும். செய்யும் வேலையை விரைவுபடுத்துவதற்காக இப்பாடல்கள் வேகமான மெட்டில் அமைக்கப்பட்டிருக்கும். மகளிர் குழுமிக் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மி ஆகும். கும்மிப் பாடல் பொதுவாக முளைப்பாரி விழாவின் பொழுது பாடப்படும் பாடல் ஆகும். தாலாட்டுப் பாடல் சிறு பிள்ளைகளை உறங்க வைக்கப் பாடப்படும் பாடலாகும்.
இவ்வகைப் பாடல்கள் பல காலமாக, ஏட்டில் எழுதப்படாமல், வாய்மொழி வழக்காகப் பல தலைமுறைகளைக் கடந்து பாடப்படுபவை ஆகும்.
தகவல்
முனைவர் முத்தையா
மீடியா கோப்புகள் இல்லை