பொழுதுபோக்கு மற்றும் வழிப்பாட்டுப் பாடல்
வகை
பொழுதுபோக்கு, கதிர் அறுத்தல், களை எடுத்தல், நாற்று நடுதல், ஒப்பாரி, வழிபாட்டுப் பாடல்.
பாடல் முறை
நாட்டுப்புறப் பாடல்
பாடப்படும் இடம்
கருமாத்தூர், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, மீனாட்சிப் பட்டி, தென்பழஞ்சி, வெள்ளை பாரப்பட்டி, முத்துப்பட்டி ஆகிய ஊர்களில் பாடப்படும் பாடல்கள்.
பாடப்படும் சூழல்- காலம்
பொழுதுபோக்கு மற்றும் கதிர் அறுத்தல் பாடல்கள் வயல்வெளிகளிலும், ஒப்பாரிப் பாடல் இறந்தவர் இல்லங்களிலும், வழிபாட்டுப் பாடல்கள் கோவில்களிலும் பாடப்படுகின்றன.
ஊர்
வடபழஞ்சி
மாவட்டம்
மதுரை
No data available
பாலினம்
பெண்
பாடலின் கால அளவு
5 முதல் 10 நிமிடங்கள்.
பாடல் விவரங்கள்
இவை தப்பு, கொட்டு, தவில் ஆகிய இசைக்கருவிகளின் துணையோடோ அல்லது தனித்தோ பாடப்படும் பாடல்களாகும்.
கூடுதல் விவரங்கள்
நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் கோயில் திருவிழாக்களில் பாடும் வழிபாட்டுப் பாடல்கள், இறந்தவர் வீடுகளில் பாடும் ஒப்பாரிப் பாடல்கள், வயலில் வேலை செய்யும்போது ஓரிசைவுக்காகவும் வேலையின் களைப்பு தெரியாமல் இருக்கவும் பாடும் கதிர் அறுத்தல் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், பொழுதுபோக்குப் பாடல்கள் ஆகியவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இப்பாடல்கள் பெரும்பாலும் எழுதி வைத்துப் பாடப்படுவன அல்ல. வழிவழியாகத் தங்கள் முன்னோர்களிடம் இருந்து இப்பாடல்களை இவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பாடல்கள் இவ்வூர் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளது. திருவிழாக் காலங்களில் சடங்கு ரீதியான பாடல்களை இசைக்கருவிகளின் துணையோடு இவர்கள் பாடுகின்றனர்.
தகவல்
முனைவர் மகாலிங்கம்
மீடியா கோப்புகள் இல்லை