வளரி வழிபாடு
Valari Worship
பாலினம்
விழாவின் வரலாறு / கதை
செல்லம்பட்டி வட்டாரத்தில் உள்ள கோவிலாங்குளத்தில் பட்டவன் சாமி கோயில் ஒன்று உள்ளது. அங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று வளரி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியாவில் குறிப்பாகத் தென்தமிழ்நாட்டில் வளரிப் பயன்பாடு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. முதல் முதலில் வளரி ஆயுதம் மரத்தில் செய்யப்பட்டது. காலப்போக்கில் இது போர்க்கருவியாக மாறிய பின்பு இரும்பில் செய்யப்பட்டது. வீசியவரின் கைக்கே திரும்ப வரும் ’பூமராங்’ போன்ற ஆயுதம் இது. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம். இதற்கென்று ஒரு கோவிலும் தனித்த வழிபாடும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூர் அருகே கோவிலாங்குளத்தில் காணப்படுகிறது.
விரத முறைகள்
விழாவுக்கு முன் பக்தர்கள் ஒரு வாரம் விரதம் மேற்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்
பொங்கலிட்டு, நிறைய வாழைத்தாறுகளும், தேங்காய்களும் படைப்பது நடைபெறுகிறது.சோழவந்தானில் இருந்து வாழைத்தாறுடன் நடந்தே வருதல்.
குறி சொல்லும் முறை
பொறுப்பாளர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
சாமியாடல் உண்டு.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
இங்குள்ள பட்டவன் சுவாமி கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று கோவிலுக்கு வளரியும் ஆளுயரக் கைத்தடியும் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உள்ளது. குலதெய்வக் கோயில்களில் சாமிப்பெட்டிகளில் வளரி வைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. பட்டவன் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் தை முதல்நாளில் கோவிலாங்குளம் கிராமத்தில் இருந்து சோழவந்தானுக்கு நடந்து சென்று வாழைத்தாறுகளை வாங்கித் தலைச்சுமையாக எடுத்து வந்து குவியலாக வைக்கின்றனர். தை 2ஆம் நாள் பட்டவன் சாமி கோயில் முன் பொங்கல் வைத்து, நேர்த்திக்கடனாக வளரி, கைத்தடி ஆகியவற்றை இன்றளவும் காணிக்கையாக வழங்குகின்றனர். பூசாரி கைத்தடி, வளரி ஆகியவற்றை ஏந்தியபடி அருள்வாக்குச் சொல்கிறார்.
சிறப்பம்சங்கள்
வாழைப்பழங்கள், ஊர்வலம் உண்டு.
விழாவின் தொன்மை
தகவல்
முனைவர் இரத்தினகுமார்