Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

ஓடுகாலன் சாமி வழிபாடு

Worship of Ōdukālan Sami

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

வேளாண்மை செழிக்கிறது. மக்கள் நோய்நொடி இல்லாமல் வாழ்கின்றனர்.


நடைபெறும் இடம்

கீழக்குயில்குடி கண்மாய்


நடைபெறும் தருணங்கள்

ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புரட்டாசி மாதத்தில் ஒருவாரம் வழிபடுகின்றனர்.


ஊர்

கீழக்குயில்குடி

மாவட்டம்

மதுரை

பாலினம்
ஆண்
விழாவின் தொன்மை
ஐந்நூறு ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விரத முறைகள்

ஒரு மாதக் காலம் இவ்வூர் ஆண்கள் தூய்மையைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்வேளையில் இவர்கள் தலைமுடியை வெட்டுவதும், தாடியை மழிப்பதும் இல்லை.

பலியிடல்

நிறைசூலி ஆட்டை அறுத்து இறந்த குட்டியை ஓடுகாலனுக்குப் படைக்கின்றனர்

குறி சொல்லும் முறை
சாமியாடி குறி சொல்வதுண்டு
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்

வருந்தி இசைத்துப் பாடுகின்றனர்

நிகழ்ச்சிநிரல் விவரங்கள்

புரட்டாசி மாதம் ஏழுநாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், நாள்தோறும் இரவு 8 மணியளவில் கண்மாய்க்குள் ஆண்கள் மட்டும் கூடி ஓடுகாலனை இறைந்து பாடி வரவேற்கின்றனர். இவ்வூரில் வசிக்கும் வேளாண் குடிகள் சாமி பாட்டைப் பாடுகின்றனர். மக்கள் ஓடுகாலனை வர்ணித்தபின் அதைப் பாட்டாகப் பாடுகிறார்கள். பின்பு பலியிடல் நாளான 7ஆவது நாள் நடு இரவில், படையலுக்கான பூசை சமையல் பணிகளைக் கால்நடை சமூக மக்கள் தயார் செய்கின்றனர். அவர்கள் நெல்லெடுத்து, குத்தி, புடைத்து, அரிசியைத் தனியாக எடுத்து, உப்புப் போடாமல் ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். நிறைசூலி ஆடு ஒன்றை ஓடுகாலனுக்கு வெட்டித் தீயில் வாட்டி, அதன் இரத்தத்தைச் சோற்றில் பிசைந்து வைக்கின்றனர். மூன்று குறிப்பிட்ட இனக்குழுத் தலைவர்கள், அந்த நிறைசூலி ஆட்டின் இறந்தக் குட்டியையும் படையலாக இட்டு, பூசை கட்டி இறைவனுக்குப் படைக்கின்றனர். பின் ஊர் ஆண்கள் அனைவரும் அன்றிரவு அந்த இடத்திலேயே அமர்ந்து அச்சோற்றைச் சாப்பிட்டு முடித்துவிட்டு ஊருக்குள் செல்கின்றனர்.

தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்
காணொலி