12345
Puratāsi Pongal Festival
பாலினம்
விழாவின் வரலாறு / கதை
இவ்விழாவின் தொடக்கமாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. சத்திய யுகத்தில், சூரிய கோத்திரத்தில் நந்தி மகரிசி என்பவர் ஒருவர், ஆலமரத்தின் கீழிருந்த புற்று ஒன்றில் தவமிருந்து வந்துள்ளார். துறவியின் தவத்தால் மனமுருகிய சிவன், அவர் கேட்கும் வரத்தை அளிப்பதாகச் சொன்னார். நாள்தோறும் சிவனை வணங்கிப் பால் அபிசேகம் செய்து வழிபடவும், கோமியம் தெளித்து, சாணம் மெழுகி, ரங்கம் (சக்கரம்) போடுவதற்கும் மாடுகள் வேண்டும் என்று துறவி வரம் கேட்டுள்ளார். சிவனும், ‘கம்பளியைக் கொங்காணி போட்டுக் கொண்டு, உன் கையிலுள்ள மூங்கில் குச்சியால் புற்றை ஒரு தட்டு தட்டி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் செல். மாடுகளை உன்பின்னே அனுப்புகிறேன். நீ ஏழு நதிகளையும் கடந்து போகும்வரை மாடுகளைத் திரும்பிப் பார்க்கக் கூடாது. இவ்வாறு செய்தால் மாடுகள் உனக்கே சொந்தம்’ என்றார். இரண்டாவது நதியைக் கடக்கும் போது மாடுகள் பளபளவென வருவதைத் துறவி திரும்பிப் பார்க்க, உடனே மாடுகள் புற்றை நோக்கி ஓடத்தொடங்கின. பின்சென்று பச்சைநிற மாட்டின் கொம்பை மட்டும் பிடித்த துறவியின் கையில் கொம்பு மட்டுமே தங்கியுள்ளது. ஏமாற்றத்துடன் திரும்பிய துறவியைப் பார்த்து ஆலமரம் ’எனக்குச் சிவனிடமிருந்து என்ன வரம் வாங்கிவந்தாய்’ எனக் கேட்க, ’உனக்கு இந்தப் பச்சைக் கொம்புகள் தான் வரமாகக் கிடைத்தன’ எனத் துறவி கூறியுள்ளார். ஆலமரம் துறவியிடம், ‘ நீங்களும் உங்கள் வம்சவழியினரும் தைப்பொங்கல் அன்று மாடு விரட்டும்போதும், திருமணம் மற்றும் பிற விழாக்களில் பந்தல் போடும்போதும் என் கிளைகளைக் கொண்டு தான் பந்தல் போட வேண்டும்’ என வேண்டியுள்ளது. அதன்படியே இச்சமுதாய மக்கள் பின்பற்றி வருகின்றனர். இப்புராணக் கதையின் படியே இவ்வூரில் தம்பிரான் விழா (சலுகை எருதுகள்) நடத்தப்படுகிறது.
பலியிடல்
இல்லை
நேர்த்திக்கடன்
விரதம் இருக்கும் பெண்கள் கொழுக்கட்டை, கரும்பு மற்றும் பூசைப் பொருட்களைக் கொண்டு வருவார்கள்
குறி சொல்லும் முறை
பொறுப்பாளர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
உருமி, தேவராட்டம், கொம்பு, சிந்தாலு, சிலகலட்டலு, தேவதுந்துபி, பத்தாலு எனத் தெலுங்கு மொழியில் குறிப்பிடப்படும் சீங்குழல் (பெரிய புல்லாங்குழல்) மற்றும் கும்மியாட்டம் (தம்பிரான் கொழுக்கட்டைத் திருவிழா தொடங்கப்பட்ட புராண நிகழ்வை வயது முதிர்ந்த பெண்கள் பாடலாகப் பாடும் வழக்கம்) ஆகிய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
வீரபாண்டி கிராமத்திற்கு அருகே இராஜகம்பள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாழும் சத்திரப்பட்டி என்ற ஊர் ஒன்று உள்ளது. இவ்வூர் மக்களுக்குப் பாத்தியப்பட்ட ’அருள்மிகு பொம்மையசாமி கோவில்’ மகா கும்பாபிஷேகம் விழா இரண்டு நாட்கள் நடைபெறும். திருவிழாவின் முதல் நாள் இரவில் ஊர்ப் பெரிய வீட்டிற்கு, ஊர்ப் பொதுமக்கள் கொழுக்கட்டை, கரும்பு மற்றும் பிற நேர்த்திக்கடன் அடங்கிய பொருட்களை ஒரு கூடையில் வைத்துக் கொண்டு வருவார்கள். இப்பொருட்கள் அடங்கிய கூடையை விலவைக் கூடை என்ற பெயரால் அழைக்கின்றனர். விழாவின் போது ஏழு நாட்கள் கெடுபிடித்தல் நடைபெறுகிறது. விரதம் இருக்கும் பெண்கள் கொழுக்கட்டை, கரும்பு மற்றும் பூசைப் பொருட்களைக் கொண்டு வருவார்கள். வெளியூரிலிருந்து கொண்டுவரப்படும் ’ஊர்ப் பொது சலுகை எருதுகள்’ என்று அழைக்கப்படும் காளை மாடுகள், பொம்மையசாமி கோவிலில் ’கொத்து பொம்மு தம்பிரான் விழா’ என்ற எருது விடும் நிகழ்வுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சலுகை எருதுகளுக்கு ஊரிலிருந்து கொண்டுவரப்பட்ட கொழுக்கட்டை, கரும்பு ஆகியன கொடுக்கப்பட்டுப் பூசை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஊரிலிருந்து கொண்டுவரப்படும் கொழுக்கட்டை, கரும்பு, பூசைப் பொருட்களைத் தம்பிரான் மாடுகளுக்குக் கொடுப்பார்
தகவல்
முனைவர் சி.மாணிக்கராஜ்