மயானக் கருப்புத் திருவிழா
SasSs
பலியிடல்
சேவல், பன்றி இவற்றைப் பலியிட்டு, அவற்றை ஆகாயத்தில் எறியும் வழக்கம் உள்ளது.
நேர்த்திக்கடன்
மண்பொம்மை செய்வது
பொறுப்பாளர்
ஊர்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
மதுரையின் மேற்குப் பகுதிகளில் சில நாட்டார் சமூகத்தினர், சாமி உருவங்களை மண்ணால் செய்து வழிபடுகின்றனர். அய்யனார்குளம், அ.ஆண்டிப்பட்டியில் வாழும், ஒரு பிரிவினர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்மாய்க்கரையின் தரையில் 10 அடி நீளத்திற்கும், 4 அடி அகலத்திற்கும் நீண்ட கால், கை வைத்த ஒரு மண் பொம்மையை / உருவத்தைச் செய்கின்றனர். இது ’ மயானக் கருப்பு / மாசானக் கருப்பு’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு மண்பொம்மை போல் காட்சி தரும் அதன் மேல் மலையிலிருந்து கூடை கூடையாக, மாடு மேய்ப்பவர்களால் சேகரிக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான நத்தை ஓடுகளை உயிருடன் தூவி அலங்கரிக்கின்றனர். ஏனெனில், நத்தைகள் வேளாண்மையைப் பெருக்கிக் கண்மாயை உயிர்ப்புடன் வைத்திருப்பவை ஆகும். ஆடி வெள்ளிக்குச் செய்யப்படும் இந்த மண் பொம்மைக்குப் சிறப்புப் பூசை நள்ளிரவில் செய்யப்படுகிறது. சேவல், பன்றி இவற்றைப் பலியிட்டு, ஆகாயத்தில் எறிந்து, ஆகாசப் பூசையை நிறைவேற்றிக் கிராமத்திற்கு மக்கள் திரும்புகின்றனர். பூசாரியையும் வானத்திற்குக் கருப்பு சாமி கூட்டிச் செல்லும் என்பதால் காலில் சங்கிலி போட்டுக் கட்டி வைத்த பின்னரே பூசாரி ஆகாசப் பூசையைச் செய்கின்றார். உசிலம்பட்டி வட்டாரங்களில் உள்ள செம்பரளி, மங்கலரேவு போன்ற இடங்களில் இந்த மண்பொம்மை செய்யும் வழக்கம் காணப்படுகிறது. இது பெரும்பாலும் சுடுகாடு மற்றும் கண்மாய்க்கரை அருகில் செய்யப்படும் சடங்காகக் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஆகாசப் பூசையின்போது, கருப்பு சாமி பூசாரியையும் வானத்திற்கு கூட்டிச் செல்லும் என்று இம்மக்கள் நம்புவதால், அவரைக் காலில் சங்கிலி போட்டுக் கட்டி வைத்த பின்னரே பூசாரி ஆகாசப் பூசையைச் செய்கின்றார்.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்