Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

முக்கனிகள் படையல் விழா / கனி மாற்று விழா

Fruit Offering /Fruit Exchange Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கனரக வாகனங்கள், லாரி, கார் போன்ற மோட்டார் தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், எவ்வித விபத்தும் இன்றித் தொழில் நல்ல முறையில் நடைபெறும் என்பது அவர்களின் நம்பிக்கை.


நடைபெறும் இடம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிக் கருப்பண்ணசாமி கோயில்


நடைபெறும் தருணங்கள்

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று கனி மாற்றும் திருவிழா தொன்று தொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.


ஊர்

தனக்கன்குளம்

மாவட்டம்

மதுரை

பாலினம்
ஆண்
விழாவின் வரலாறு / கதை

திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பண்ணசாமி கோவிலில் முக்கனிகள் படையல் விழா நடைபெறுகிறது. இதில் ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டு சாமிக்கு மா, பலா மற்றும் வாழைப் பழங்களைப் படைத்து வழிபடுகின்றனர். இதையொட்டித் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள சாமி பெட்டி இருக்கும் இடத்திலிருந்து ஏராளமான ஆண்கள் ஆயிரக்கணக்கில் மா, பலா மற்றும் வாழைப் பழங்களான முக்கனிகளை ஒரு வாகனத்தில் வைத்து அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உச்சிக் கருப்பண்ணசாமி கோவிலுக்கு எடுத்து வருகின்றனர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாகக் கருதப்படுகிறது. இங்கு உச்சிக்கால வேளையில் சாமிக்குக் குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டுச் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் வந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்கின்றனர்.

விழாவின் தொன்மை
இந்தக் கோவிலில் தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள்.
பொறுப்பாளர்
ஊர்
சிறப்பம்சங்கள்

படைக்கப்பட்ட முக்கனிகளான மா பலா வாழை ஆகியவற்றை பக்தர்கள் தங்களின் தேவைக்கு எடுத்துச் சாப்பிட்டு விட்டு மீதியைக் கோயில் வளாகத்திலேயே வைத்து விட்டுச் சென்று விடுவார்கள். பிரசாதப் பழங்களை வீட்டுக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இந்தக் கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோவிலில் தரும் விபூதியை ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் பூசிக்கொள்கின்றனர்.வழிபாடு முடிந்த பின்பு அனைவரும் தங்களது நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விட்டுக் கோவிலிலிருந்து வெளியே செல்கின்றனர்.

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

காணொலி