தலையருவித் திருவிழா
Thalai Aruvi Festival
வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
ஆசாரியரான முதல் திருமாலையாண்டான் மறைந்த ஐப்பசி மாதம் வளர்பிறைப் பன்னிரண்டாம் நாளில் (சுக்கிலபட்சத் துவாதசி) ஆசாரிய மரியாதையின் பொருட்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது.
நடைபெறும் இடம்
அழகர் மலை அருவி
நடைபெறும் தருணங்கள்
ஐப்பசி மாதம் வளர்பிறைப் பன்னிரண்டாம் நாள்
ஊர்
அழகர் கோவில்
மாவட்டம்
மதுரை
பாலினம்
பொது
விழாவின் வரலாறு / கதை
ஐப்பசி மாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாளன்று (சுக்கிலபட்சத் துவாதசியன்று) நடைபெறும் எண்ணெய்க்காப்பு உற்சவத்திற்குத் ”தலையருவி உற்சவம்”, ”தொட்டி உற்சவம்” என்னும் பெயர்களும் உண்டு. மலைமீதுள்ள அருவிக்கரையில் நடப்பதால் தலையருவி உற்சவம் என்றும், அருவிநீர் ஒரு கல் தொட்டியில் விழுவதனால் 'தொட்டி உற்சவம்' என்றும் இத்திருவிழா அழைக்கப்படுகிறது. வைணவ ஆசாரியரான முதல் திருமாலையாண்டான் என்பவர் ஆளவந்தாரின் மாணவர்; இராமானுசர்க்குத் திருவாய்மொழி கற்பித்தவர். இவருக்கென்று அழகர்கோவிலுக்குள் ஒரு சந்நிதியும் உள்ளது. ஐப்பசி மாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாளில்தான் முதல் திருமாலையாண்டான் காலமானார். மறைந்த ஆசாரியருக்கு, மரியாதையின் பொருட்டு, இறைவன் மலைமீதுள்ள சிலம்பாற்றிற்குச் சென்று தைலமிட்டு நீராடித் திரும்புகிறார்.
தமிழ்நாட்டு வைணவத்தில் குருவின் சிறப்பை விளக்கிக் காட்டும் இத்திருவிழா இக்கோவிலுக்கேயுரியது.
பொறுப்பாளர்
தனிநபர் / குடும்பம்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
இறைவன் தேவியரின்றித் தனித்துச் சென்று நீராடுகிறார். குடத்து நீரில் நீராடாமல், அருவியின் கீழ் நீராடுகிறார்.இந்நிகழ்ச்சியின்போது கலந்து கொள்ளும் மக்களுக்குத் தேய்த்து நீராடத் தைலம் வழங்கப்படுகிறது.
தகவல்
முனைவர் துர்கா தேவி
குறிப்புகள்
அழகர்கோயில்; முனைவர் வேதாசலம்.