முளைப்பாரித் திருவிழா
Mulaippāri Festival
விழாவின் வரலாறு / கதை
விவசாயிகள், ஒவ்வோர் ஆண்டும் விளையும் தானியத்தில் ஒரு பங்கை விதையாக எடுத்துக் குதிரில் வைத்தோ கொட்டாய் கட்டியோ பாதுகாப்பார்கள். இவ்வாறு பாதுகாத்த விதைகள் தரமானவைதானா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் முளைப்பாரி எடுக்கும் சடங்கு தொடங்கியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அம்மன் கோயில்கள் இருக்கும் ஊர்களில், கோவிலுக்கு அருகில் 'முளைப்பிறை' எனப்படும் கீற்றுக்கொட்டகை அமைக்கப்படும். அம்மனுக்குக் காப்புக் கட்டித் திருவிழா தொடங்கும் நாளில் அந்தக் கொட்டகையில் முளைப்பாரி போடுவார்கள். ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் முளைப்பிறைக் கொட்டகையில் கூடுவார்கள். முளைப்பாரிக் குடம் அல்லது கூடையில் 21 வகையான தானிய விதைகளைப் பரப்பி நீரிட்டு முளையிடுவார்கள். அம்மனுக்கு 21 புத்திரிகள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 21 தானியங்கள் முளையிடப்படுகின்றன.
விரத முறைகள்
அசைவம் எடுக்காமல் நாள்தோறும் பூசை செய்து வழிபடுகின்றனர். ஏழு நாள் இடைவெளியில் நோன்பு இருக்கின்றனர்.
நேர்த்திக்கடன்
தீச்சட்டி தூக்குதல், பூமிதி, முளைப்பாரி.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
ஒயிலாட்டம்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
முளைப்பாரித் திருவிழாவின் முதல் நாள் கோவிலில் பூசை செய்து பயறு விதைக்கப்படுகிறது. ஏழு நாள் இடைவெளியில் விரதம் இருக்கின்றனர். ஏழாவது நாள் முடிவில் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதனுடன் மந்தையம்மன் சாமியையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று தெப்பக்குளத்தில் வைத்து வழிபடுவது இவ்விழாவில் வழக்கமாக உள்ளது.
சிறப்பம்சங்கள்
பல்லக்கு ஊர்வலம்
தகவல்
முனைவர் துர்கா தேவி
குறிப்புகள்
vikatan.com/spiritual/festival