Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

முறுக்கோடை பாறை ஓவியம்

வண்ணங்கள்

இரத்தச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்


அளவுகள்

3 மீட்டர் அகலம், 2 மீட்டர் உயரம்


காலம்

வரலாற்று காலத்துக்கு முந்தியதாக இருக்கலாம்


ஊர்

முறுக்கோடை

மாவட்டம்

தேனி

ஓவியத்தில் குறிப்புகள்
இப்பாறைகளில் மூன்று காலக்கட்டங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. முதலில் சிவப்பு நிறத்திலும், பின்பு வெள்ளை நிறத்திலும் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இவற்றில் இரத்தச் சிவப்பில் வரையப்பட்ட ஓவியங்களின் உருவ அமைப்பைச் சரிவர அறிய முடியவில்லை. இதற்கு அடுத்த காலக்கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களில், சற்று மங்கிய வெள்ளை நிறத்தில் மனித உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கு அடுத்த காலக்கட்டத்தில் வரையப்பட்ட வெள்ளை நிற ஓவியங்களிலும் மனிதர்கள் நின்ற நிலையில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இரத்தச் சிவப்பு நிற ஓவியங்களில் கோணல்மாணலான கோடுகள் (ஜிக்ஜாக் வடிவமைப்புகள்) மற்றும் பிற வடிவியல் வடிவங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.
ஓவியத்தின் தற்போதைய நிலை
பாதுகாக்கப்பட வேண்டிய பாறை ஓவியம்
கூடுதல் விவரங்கள்
மொட்டப்பாறை என்ற மலையில் 3 மீட்டர் அகலம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்ட பாறை ஓவியம் காணப்படுகிறது. இப்பாறையில் மூன்று காலக்கட்டங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. முதலில் சிவப்பு நிறத்திலும் பின்பு வெள்ளை நிறத்திலும் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இவற்றில் இரத்தச் சிவப்பில் வரையப்பட்ட ஓவியங்களின் உடைய உருவ அமைப்பைச் சரிவர அறிய முடியவில்லை. இதற்கு அடுத்துச் சற்று மங்கிய வெள்ளை நிறத்தில் மனித உருவங்கள் நின்ற நிலையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

மீடியா கோப்புகள் இல்லை