Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

குண்டல்நாயக்கன்பட்டி பாறை ஓவியம்

வண்ணங்கள்

வெள்ளை


அளவுகள்

1.5 மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம்


காலம்

வரலாற்று காலத்துக்கு முந்தியதாக இருக்கலாம்


ஊர்

குண்டல்நாயக்கன் பட்டி

மாவட்டம்

தேனி

ஓவியத்தில் குறிப்புகள்
இந்த சிறுகுன்றில் காணப்படும் பாறை ஓவியம் ஒன்றில், குதிரையின் மேல் அமர்ந்துள்ள மனிதன் ஒருவன் தன் வலது கையில் உள்ள ஆயுதத்தை ஓங்கிப் பிடித்துள்ளான். இந்த பாறை ஓவியத்தின் மேல் பகுதியில், இரு வீரர்கள் தங்கள் வலது கையில் வாளும் இடது கையில் கேடயமும் பிடித்தபடி சண்டைக்கு தயார் நிலையில் இருப்பது போன்று காட்சி வரையப்பட்டுள்ளது. இவர்களுக்கு அருகில் இருவர் கைகோர்த்து நின்ற படி உள்ளனர். மற்றொரு இடத்தில் மனிதன் ஒருவன் ஓடுவது போன்ற காட்சி காணப்படுகிறது. இதன் அருகிலேயே நீண்ட தலையுடைய மனிதன் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. இவ்விடத்திலுள்ள பிற பாறை ஓவியங்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.
ஓவியத்தின் தற்போதைய நிலை
பாதுகாக்கப்பட வேண்டிய பாறை ஓவியம்
கூடுதல் விவரங்கள்
சிறுமலை என்ற பெயரில் அழைக்கப்படும் மலையில் உள்ள கருப்பசாமி பாறையில், 1.5 மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலமுடைய பரப்பில் பாறையோவியம் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளது. குதிரை ஒன்றில் வீரன் ஒருவன் அமர்ந்து, வலக்கையில் உள்ள ஆயுதத்தை ஓங்கிய நிலையில் உள்ளான். இதற்கு மேல் இரு வீரர்கள் வலக்கையில் வாளுடனும் இடக்கையில் கேடயம் பிடித்தும் சண்டைக்குத் தயார் நிலையில் உள்ளது போல் வரையப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பக்கத்தில் இருவர் கைகோத்து நின்றவாறு உள்ளனர். மனிதன் ஒருவன் ஓடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறான். மற்ற ஓவியங்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

மீடியா கோப்புகள் இல்லை