மூணாண்டிப்பட்டி பாறை ஓவியம்
No data available
ஓவியத்தில் குறிப்புகள்
இயற்கையாக அமைந்த இந்தக் குகைத் தளத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. சிவப்பு நிற ஓவியங்களில் அடையாளப்படுத்த முடியாத பெரிய கோடுகள் இரண்டு இடத்தில் வரையப் பட்டிருக்கின்றன. இவ்விடத்தில் காணப்படும் பிற சிவப்பு நிற ஓவியங்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன. வெள்ளை நிற ஓவியங்களில் காணப்படும் சில மனிதர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்திச் சண்டைக்குத் தயார் நிலையில் இருப்பது போன்றும் காட்சி இடம் பெற்றுள்ளது. மற்றொரு பாறை ஓவியத்தில் காணப்படும் மனிதன் ஒருவன் வளரி அல்லது அரிவாள் போன்ற ஆயுதத்தை ஓங்கிப் பிடித்துள்ளான். இவற்றோடு வெண்மை நிறத்தில் சில விலங்குகளும் வரையப்பட்டிருக்கின்றன. இக்குகைத் தளத்தில் மூன்று காலக்கட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன.இங்கு இரண்டு வெவ்வேறு காலகட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. அதில் சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் காலத்தில் முந்தியதாக இருக்கக்கூடும்.
ஓவியத்தின் தற்போதைய நிலை
பாதுகாக்கப்பட வேண்டிய பாறை ஓவியம்
கூடுதல் விவரங்கள்
மூணாண்டிப்பட்டிக்கு அருகே உள்ள குன்றில் மங்குலிப் புடவு என்ற இயற்கையாக அமைந்த குகைத் தளத்தில் சிவப்பு நிறம் மற்றும் வெண்மை நிற ஓவியங்கள் காணப்படுகின்றன.
சிவப்பு நிறத்தில் செறிவான கோடு வடிவங்கள் இரண்டு இடத்தில் உள்ளன. மற்ற சிவப்பு நிற ஓவியங்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன. வெள்ளை நிற ஓவியத்தில் மனிதர்கள் சண்டையிடும் காட்சியும் சில மனிதர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்தி இருப்பதுபோலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு மனிதன் வளரி ஆயுதம் அல்லது அரிவாள் போன்ற ஒன்றைக் கையில் பிடித்துள்ளான். இவற்றோடு சில விலங்குகள் வெண்மை நிறத்தில் வரையப்பட்டிருக்கின்றன. இக்குகைத் தளத்தில் மூன்று காலக்கட்டங்களில் வரையப்பட்ட ஓவியம் காணப்படுகிறது.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
மீடியா கோப்புகள் இல்லை