மல்லிகேஸ்வரர் / மல்லிகார்ச்சுனர் கோயில்
Mallikeswarar / Mallikarjuna Temple.
அமைவிடம்
சீலையம்பட்டி ஊருக்கு மேற்குப் பக்கம் உள்ள வாய்க்கால் கரையில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
இக்கோயில் சின்னமனூர் சிவன் கோயிலுக்குத் துணைக் கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. மேலும் இக்கோயில் சிவன் சுயம்புலிங்கமாக உள்ளார்.
மூலவர் பெயர்
மல்லிகேஸ்வரர்
ஊர்
சீலையம்பட்டி
மாவட்டம்
தேனி
கோயில் குளம்/ஆறு
ஆகமம்
பூசைக்காலம்
நாள்தோறும் ஒரு காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மற்றும் சிவனுக்கு உகந்த நட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
கல்வெட்டு / செப்பேடு
கோயிலின் அடித்தளம் (அதிட்டானம்) முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்திருப்பதால் அதிலுள்ள கல்வெட்டுகளைக் காண முடியவில்லை.
சிற்பங்கள்
தல வரலாறு / கதைகள்
சின்னமனூரில் உள்ள பூலானந்தீஸ்வரர் கோயில் கட்டும் பொழுது பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள இவ்வூர், சின்னமனூரில் அமைந்துள்ள பூலானந்தீஸ்வரர் கோயிலுக்கு தானமாக விடப்பட்டது என்ற செய்தி உள்ளது. பொது ஆண்டு 11- 12 ஆம் நூற்றாண்டுகளில், இவ்வூர் சந்தன நல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறுகள் உள்ளன.
கோயில் அமைப்பு
கருவறையும் அர்த்த மண்டபமும் மட்டுமே உள்ளன. இக்கோயிலில் விமானம் மற்றும் கோபுரங்கள் இல்லை.
சுருக்கம்
மல்லிகேஸ்வரர் அல்லது மல்லிகார்ச்சுனர் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். இக்கோயில் விமானம் மற்றும் கோபுரங்கள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியில் கருவறையும் அர்த்த மண்டபமும் மட்டுமே உள்ள. மூலவர் சந்நிதி முன்பு இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். மேலும் சிவனுடைய உடனுறையான அகிலாண்டேஸ்வரிக்கு இங்குத் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி மற்றும் பிரம்மா சிலைகள் உள்ளன. அம்மன் சந்நிதி அருகில் சப்தமாதர் சிலைகளும் காணப்படுகின்றன. இக்கோயில் சின்னமனூரில் உள்ள பூலானந்தீஸ்வரர் கோவிலைக் கட்டும் பொழுது பாண்டிய மன்னர்களால், பொது ஆண்டு 11-12 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சின்னமனூர், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில், வீரபாண்டி உப்பார்பட்டி மார்க்கையன்கோட்டை மாயப்பாண்டீஸ்வரர் கோயில், உத்தம்பாளையம் சிவன் கோயில், பெருமாள் கோயில், சமணப்பள்ளி மற்றும் கருப்பண்ணசாமி கோயில்
செல்லும் வழி
தேனிக்கு மேற்குப் பக்கமாக குமுளி செல்லும் சாலை வழியாகச் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேனி, சின்னமனூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை