Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

திருக்காளகஸ்தீஸ்வரர் என்ற ஞானம்மன் கோயில்

Thirukkalahastheeswarar Temple / Gnanamman Temple

அமைவிடம்

ஊருக்கு தெற்கு பக்கமாக உள்ள மஞ்சளாற்றின் வடகரையில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

மஞ்சளாற்றின் வடகரையில் அமையப்பெற்ற ஒரே சிவன் கோயில்


மூலவர் பெயர்

திருகாளகஸ்தீஸ்வரர்


ஊர்

கெங்குவார்பட்டி

மாவட்டம்

தேனி

தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
மஞ்சளாறு
ஆகமம்
சைவ கோயில் ஆகமம்
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் சிவனுக்கு உகந்த நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இப்பொழுது இக்கோயில் பூட்டி இருப்பதால் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12 -13ஆம் நூற்றாண்டு, பிற்காலப் பாண்டியர் காலம்
கல்வெட்டு / செப்பேடு
மூன்று கல்வெட்டுகள் உள்ளன
சிற்பங்கள்
முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் பிரம்மா சிற்பங்கள் உள்ளன
கோயில் அமைப்பு
விமானமும் கோபுரமும் இல்லை. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன உள்ளன.
சுருக்கம்
திருக்காளகஸ்தீஸ்வரர் என்ற ’ஞானம்மன் கோயில்’ மஞ்சளாற்றின் வடகரையில் அமையப்பெற்ற ஒரே சிவன் கோயில் ஆகும். கோயிலின் வெளியில் பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. முழுமையாகக் கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் பொது ஆண்டு 12 -13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டிய மன்னர்கள் கட்டியதாக இருக்கலாம். இங்குக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றில் விநாயகர், முருகன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் உள்ள எல்லாக் கோட்டசிற்பங்களும், அரைத்தூண்களும், தூண் சிற்பங்களும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. இங்கு மூன்று தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலைச்சுற்றி சிதறிக்கிடக்கும் கற்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கிருந்த விமானம் இடிந்து விழுந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
காமாட்சி அம்மன் கோயில், பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில், பெரியகுளம் சிவன் கோயில், பெருமாள் கோயில்
செல்லும் வழி
வத்தலக்குண்டு ஊரிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் கெங்குவார்பட்டி பேருந்து நிலையத்தின் அருகே வயல்வெளியில் அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியகுளம், வத்தலக்குண்டு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திண்டுக்கல், மதுரை, தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
வத்தலக்குண்டு, பெரியகுளம்

மீடியா கோப்புகள் இல்லை

No media Files