பூரண புஷ்கலா சமேத பொன்மலை ஐயனார் கோயில்
Poorana Pushkala and Ponmalai Ayyanar Temple
கோயிலின் வேறு பெயர்
பொன்மலை ஐயனார் கோயில், கொழுந்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
கெங்குவார்பட்டியில் இருந்து ஓட்டணை செல்லும் சாலையில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
இக்கோயில் சிவனுக்காகக் கட்டப்பட்டது . பின்னர் காவல் தெய்வமான ஐயனார் பெயரில் ’பொன்மலை ஐயனார் கோயில்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஊர்
கெங்குவார்பட்டி
மாவட்டம்
தேனி
மூலவர் பெயர்
கொழுந்தீஸ்வரர்
பூசைக்காலம்
நாள்தோறும் ஒரு காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இங்குள்ள சிவனுக்குச் சைவ வழிபாட்டு முறைப்படி பூசைகளும், ஐயனாருக்குக் கிராமப்புற முறைப்படி பூசைகளும் நடைபெறுகின்றன.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கோயில் வளாகத்தில் தனித்தனிப் பீடங்களில் ஏழு கன்னிமார்கள், கருப்பண்ணசாமி, வனப் பேச்சி அம்மன், இலாட சன்னாசி, குதிரை, யானை போன்ற சுதைச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோயில் அமைப்பு
சிவன் சந்நிதியில் மூன்று தள விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன காணப்படுகின்றன.
சுருக்கம்
இந்தப் பொன்மலை ஐயனார் கோயில், ’கொழுந்தீஸ்வரர் கோயில் ’ என்ற வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறது. கொழுந்தீஸ்வரரான சிவனுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர், காவல் தெய்வமான ஐயனார் பெயரில் வழங்கப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட சிவன் கோயிலில் மூன்று தள விமானம் அமைப்பு உள்ளது. இங்குக் கோபுர அமைப்பு காணப்படவில்லை. ஆனால் நுழைவாயிலில் சுதைச் சிற்பங்களுடன் கூடிய வளைவு உள்ளது. இக்கோயில் வளாகத்தின் நுழைவாயிலின் அருகில் குதிரையின் மேலமர்ந்த ஐயனாரின் பெரிய சுதைச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிரக் கோயில் வளாகத்தில் தனித்தனிப் பீடத்தின்மேல் ஏழு கன்னிமார் சிற்பம், வனப் பேச்சி அம்மன், இலாட சன்னாசி சுவாமி, கருப்பண்ண சுவாமி ஆகியோருக்கும் சிறு சுதைச்சிற்பங்கள் உள்ளன. இவற்றைத் தவிர ஒரு பெரிய பீடத்தின்மேல் நாகர் சிலைகளும் உள்ளன. பல ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இக்கோயில் அண்மைக்காலத்தில் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோவிலாகக் கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இந்தக் கோயிலுக்கு அருகிலேயே பிற்காலப் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஞான அம்மன் கோவிலும், ஜமீன்தார்கள் காலத்தில் கட்டப்பட்ட காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளன
செல்லும் வழி
கெங்குவார்பட்டியிலிருந்து ஓட்டணைக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வத்தலக்குண்டு, பெரியகுளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திண்டுக்கல், மதுரை, தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
வத்தலக்குண்டு, பெரியகுளம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files