அருள்மிகு நீலகண்டேஸ்வரர் கோயில்
Neelakanteswarar Temple
மூலவர் பெயர்
திருநீலகண்டேஸ்வரர்
கோயில் குளம்/ஆறு
முல்லை ஆறு
பூசைக்காலம்
சிவராத்திரி அன்று மட்டும் கோயில் திறக்கப்பட்டு பூசைகள் செய்யப்படும்.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயில் கருவறையிலும் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறத்தில் உள்ள பட்டிகை வரிகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் கோயிலின் நுழைவாயில் அருகில் இரண்டு அண்மைக்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
கோயிலின் வெளிப்பக்கம் பிற்கால விநாயகர் சிற்பமும் நந்தி சிற்பமும் உள்ளன
கோயில் அமைப்பு
விமானமும் கோபுரமும் இல்லாத இக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன காணப்படுகின்றன. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றின் வெளிப்பகுதியில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட தேவகோட்டங்கள் உள்ளன. இவை இறை உருவச் சிற்பங்கள் எதுவும் இன்றிக் காணப்படுகின்றன.
சுருக்கம்
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நீலகண்டனான சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட கற்கோவிலாகும். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் கொண்ட இக்கோயிலில் விமானமோ, கோபுரமோ, வெளிச் சுற்றுச்சுவரோ இல்லை. ஏதோ ஒரு காரணத்தினால் விமானமும் கோபுரமும் கட்டப்படாமல் விடப்பட்டிருக்கலாம் அல்லது பிற்காலத்தில் அவை சேதமடைந்திருக்கலாம். எனினும் கருவறையின் வெளிச்சுவரில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட தேவகோட்டங்கள் உள்ளன. ஆனால் அவை இறை உருவச் சிற்பங்கள் எதுவுமின்றிக் காணப்படுகின்றன. கோயிலின் ஜகதி மற்றும் உபானப் பகுதி மண்ணில் புதைந்துள்ளது.
இக்கோயில் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தின் வெளிப் பக்கம் காணப்படும் குமுதம் மற்றும் பட்டிகை வரிகளில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கட்டமைப்பின் அடிப்படையில் இது பொது ஆண்டு 10- 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிற்காலப் பாண்டியர் கோவிலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொது ஆண்டு 1976 இல் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்யப்பட்டது என்ற செய்தியை இங்குள்ள அண்மைக்காலக் கல்வெட்டு கூறுகிறது. இப்போது சிவராத்திரி அன்று மட்டும் இக்கோயில் திறக்கப்பட்டுப் பூசைகள் செய்யப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
கோயில் அமைப்பின் அடிப்படையில் பொது ஆண்டு 10 - 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பெருமாள் கோயில்
செல்லும் வழி
உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் அமைந்துள்ள க.புதுப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்குப் பக்கமாகச் செல்ல வேண்டும்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கம்பம், உத்தமபாளையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி, போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
கம்பம், உத்தமபாளையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files