அருள்மிகு விளியல் கல்ராயப் பெருமாள் கோயில்
Viliyal Kalraaya Perumal Temple
பிற தெய்வத்தின் பெயர்கள்
ஸ்ரீதேவி பூதேவி சமேத, ஸ்ரீ விளிக்கல்ராய பெருமாள், ஸ்ரீ மதுரவல்லி தாயார், ஸ்ரீ ருக்குமணி, சத்தியபாமா, ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ணன், லட்சுமி நரசிம்மர், அனுமார் மற்றும் நம்மாழ்வார்.
அமைவிடம்
க.புதுப்பட்டி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பக்கம் உள்ளது.
மூலவர் பெயர்
ஸ்ரீவிளிக்கல்ராயப் பெருமாள்
ஊர்
க.புதுப்பட்டி
மாவட்டம்
தேனி
ஆகமம்
தென்னாச்சார்ய பஞ்சராத்ர ஆகமம்
பூசைக்காலம்
நாள்தோறும் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
திருவிழாக்கள் விவரங்கள்
திருவோணம், உத்திரம், பஞ்சாராத்திர ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 15- 16ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயில் அர்த்த மண்டபம் மற்றும் கருவறையின் வெளிப்புறத்தில் 6 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் மன்னர் அச்சுத தேவராயர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றன. தானதய நாயக்கர் இக்கோயிலுக்குத் திருவிடையாட்டமாக நிலமும் கோமடத்திற்கு மாடுகளும் தானம் அளித்த செய்தி கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டுடன் அச்சுத தேவராயரின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சிற்பங்களும், ஜெயன் - விஜயன் என்ற துவாரபாலர்களின் சிற்பமும், நம்மாழ்வார், இராமானுஜர், ஜெயவீர அனுமார் சிற்பங்களும் உள்ளன.
கோயில் அமைப்பு
விமானத்துடன் கூடிய கருவறை, கருவறையின் முன்பு அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. கருவறையின் வெளிப்பகுதியில்தேவ கோட்டங்கள் காலியாக உள்ளன.
சுருக்கம்
ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீ விளிக்கல்ராயப் பெருமாள் கோயில், “ஸ்ரீ மதுரவல்லித் தாயார் கோயில்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கருவறை, அதற்கு மேல் இரண்டு நிலை விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன உள்ளன. மூலவர் சந்நிதியில் பெருமாள், பூதேவி -ஸ்ரீதேவி சிற்பமும், ஜெயன் - விஜயன் என்ற வாயிற்காவலர்களின் சிற்பமும், நம்மாழ்வார், இராமானுஜர், ஜெயவீர அனுமார் சிற்பங்களும் உள்ளன. இக்கோயிலின் தெற்குப் பக்கம் மதுரவல்லித் தாயாருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. இக்கோயிலின் அர்த்த மண்டபம் மற்றும் கருவறையின் வெளிப்பகுதிகளில் 6 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள் அனைத்தும் அச்சுத தேவராயர் காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றுடன் அச்சுத தேவராயரின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டிருக்கிறது. இவர் இக்கோயிலுக்குத் திருவிடையாட்டமாக நிலமும், கோமடத்திற்கு மாடுகளும் தானமாகக் கொடுத்த செய்தி கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கோயில் பொது ஆண்டு 15- 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திரு நீலகண்டேஸ்வரர் கோயில்
செல்லும் வழி
க.புதுப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குப் பக்கம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கம்பம், உத்தமபாளையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி, போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உத்தமபாளையம், கம்பம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files