Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

மீனாட்சி அம்மை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் கோயில்

Meenakshi Ammai and Soma Sundareswarar Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

சொக்கநாதர் என்ற சுந்தரேஸ்வரர்


அமைவிடம்

மூல வைகை ஆற்றங்கரையில் உள்ளது.


மூலவர் பெயர்

சுந்தரேஸ்வரர்


ஊர்

கடமலைக்குண்டு

மாவட்டம்

தேனி

தல மரம்
அரசமரம், வேப்பமரம்
கோயில் குளம்/ஆறு
வைகை ஆறு
ஆகமம்
சிவாகமம்
பூசைக்காலம்
உச்சிக் காலப் பூசை நண்பகல் 12 மணிக்கு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மீனாட்சி திருக்கல்யாணம், திருவாதிரை, ஆருத்திரா தரிசனம் ஆகிய நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
கல்வெட்டுக்கள் சிதைந்துள்ளன.
சிற்பங்கள்
மீனாட்சி அம்மன், நந்தி, முருகன், பைரவர், நர்த்தன கணபதி, இலட்சுமி நரசிங்க பெருமாள், மகா கணபதி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், தேவார நால்வர், வாயிற்காவலர்கள், துர்க்கை, மற்றும் நவக்கிரகங்களின் சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
கருவறையில் சிவன் மற்றும் அம்மன் சந்நிதிக்குப் பொதுவான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
மீனாட்சி அம்மை உடனுறை சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானைச் சொக்கநாதர் என்றும் அழைக்கின்றனர். நுழைவாயிலின் வளைவின் மேல் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானப்பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் சுதைச்சிற்பம் காணப்படுகிறது. மூலவர் சந்நிதியை அடுத்து மீனாட்சி அம்மன் சந்நிதியும் உள்ளது. கோயில் வளாகத்தில் நந்தி, முருகன், பைரவர், நர்த்தன கணபதி, இலட்சுமி நரசிங்க பெருமாள், மகா கணபதி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், தேவார நால்வர், துவாரபாலகர்கள், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் சிற்பங்களூம் உள்ளன. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தொடர் வழிபாட்டில் இருந்துள்ளது. தற்போது இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர் காலம்
தல வரலாறு / கதைகள்
நூறு சிவன் கோயில்கள் கட்ட வேண்டும் என்ற வேண்டுதலைக் கொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒருவன் 99ஆவது கோவிலாக இக்கோயிலைக் கட்டியதாகச் செவிவழிச் செய்தி உள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மயிலாடும்பாறை பால்வண்ண நாதர் கோயில்
செல்லும் வழி
கடமலைக்குண்டு சேவல்கட்டு புளியமரம் வழியாக
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடமலைக்குண்டு பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
தேனி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு.

மீடியா கோப்புகள் இல்லை

No media Files