அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோயில்
Virupachi Arumuga Nayinar Temple
கோயிலின் வேறு பெயர்
தீர்த்தத் தொட்டி முருகன் கோயில்
அமைவிடம்
கோடாங்கிப் பட்டியில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தீர்த்தத் தொட்டி என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது
தலத்தின் சிறப்பு
இங்குள்ள தீர்த்தக் குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் விழுந்து கொண்டே இருக்கும்.
ஊர்
தீர்த்தத் தொட்டி
மாவட்டம்
தேனி
மூலவர் பெயர்
தல மரம்
கோயில் குளம்/ஆறு
ஆகமம்
பூசைக்காலம்
நாள்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
தைப்பூசம், தமிழ் ஆண்டுப்பிறப்பு, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை நாள், கந்த சஷ்டி மற்றும் முருகனோடு தொடர்புடைய பிற நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 1850ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில், இக்கோயில் மகா மண்டபத்தைக் கட்டிக் கொடுத்தவரைப் பற்றிய செய்தி உள்ளது. பொது ஆண்டு 1928 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில், போடிநாயக்கனூர் ஜமீன்தார் மகள் இக்கோயிலுக்குச் செய்த உபயத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
கோயில் அமைப்பு
இங்குத் திராவிடக் கட்டடக்கலை அமைப்பு காணப்படுகிறது. இது கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், மூன்றுதள விமானம் மற்றும் நுழைவாயிலில் கோபுர அமைப்பைக் கோண்ட கோவிலாகும்.
கூடுதல் விவரங்கள்
அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோயில், ’தீர்த்தத் தொட்டி முருகன் கோயில்’ என்ற வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் மூலவராக முருகன் மயில்மேல் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இங்கு உருத்திராட்சமூர்த்தி என்ற பெயரில் சிவனுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் உள்ளது. கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தக் தொட்டியில் எக்காலத்திலும் வற்றாமல் நீர் இருப்பதாகக் கருதுகின்றனர். இந்தத் தீர்த்தக் தொட்டியில் காணப்படும் நீர்க்குழாய் புலி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாயின் மேல் சுவர்ப் பகுதியில் முருகன், விநாயகர், சிவலிங்கம் ஆகிய உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்து வந்த உழவர் ஒருவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றித் தான் சிலையாக ஓரிடத்தில் மண்ணில் புதைந்து உள்ளதாகவும், அதைத் தோண்டி எடுத்து அதே இடத்தில் ஒரு கோயில் கட்டி வழிபட்டு வந்தால் அவரது கவலைகள் தீரும் என்றும் கூறி மறைந்துள்ளார். உடனே உழவர் தான் கனவில் கண்ட நிகழ்வை இப்பகுதியின் குறுநில மன்னரிடம் கூறியுள்ளார். உழவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையை அதே இடத்தில் ஒரு சிறிய கோயில் கட்டி நிறுவிப் பலகாலமாக வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில் இக்கோயில் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டுள்ளது.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில், போடிநாயக்கனூரில் அரண்மனை, பரமசிவன் கோயில், பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன.
செல்லும் வழி
தேனியில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில் கோடாங்கிப் பட்டி கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேனி, கோடாங்கிப்பட்டி, போடிநாயக்கனூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி, போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை