அருள்மிகு விக்கிரம பாண்டீஸ்வரமுடையார் கோயில்
Vikrama Pandiswaramudaiyar Temple
அமைவிடம்
மார்க்கையன்கோட்டை ஊரின் தென்கிழக்குப் பகுதியில் சுரபி நதி என்று அழைக்கப்படும் முல்லையாற்றின் மேற்குக் கரையில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டிய மன்னன் பெயரில் அமைக்கப்பட்ட இக்கோயில் முல்லை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
மூலவர் பெயர்
விக்கிரம பாண்டீஸ்வரர்
ஊர்
மார்க்கையன்கோட்டை
மாவட்டம்
தேனி
தல மரம்
கோயில் குளம்/ஆறு
ஆகமம்
பூசைக்காலம்
நாள்தோறும் இருகாலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த நட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் மன்னன் விக்கிரம பாண்டியன் காலத்தைச் சேர்ந்த 4 கல்வெட்டுக்கள் உள்ளன. அவை கோயிலுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றன. அந்நிலங்களுடைய எல்லைகள் வரையறுக்கப்பட்ட செய்தியும் வெட்டப்பட்டிருக்கிறது.
சிற்பங்கள்
தல வரலாறு / கதைகள்
மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டிய மன்னன், தனது நாட்டில் 64 சிவலிங்கங்களை நிறுவ வேண்டும் என்று எண்ணினார். முல்லை ஆற்றின் மேற்குக் கரையில் 61ஆவது சிவலிங்கத்தை நிறுவி, அவ்விடத்தில் ‘விக்கிரம பாண்டீஸ்வரர்’ என்று தன் பெயரிலேயே கோயில் ஒன்றையும் எழுப்பி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இக்கோவிலோடு தொடர்புடைய மற்றொரு கதையில் மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியன் இப்பகுதிக்கு வேட்டையாட வரும் பொழுது இக்கோவிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
கோயில் வளாகத்தில் மூன்றுதள விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் பிற சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் மூலவரான சிவன் கருவறையில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இக்கோயில் விமானம் திராவிடக் கட்டடக்கலை அமைப்பைக் கொண்டுள்ளது. விக்கிரம பாண்டிய மன்னன் இக்கோயிலைக் கட்டியிருப்பதாகவும், கோயிலுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்தபின் எல்லைகள் வரையறுக்கப்பட்டதாகவும் இங்குள்ள 4 கல்வெட்டுகள் கூறுகின்றன. முதலில் இவ்விடத்தில் கோயில் கருவறை மட்டுமே இருந்துள்ளது. பிற்காலத்தில் மகாமண்டபமும் பிற சந்நிதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் பல வடிவிலான லிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பிரம்மா சிலை ஒன்றும் உள்ளது. கோயிலின் வடக்குப் பக்கம் சண்டிகேசுவரர், கல்யாண சுப்பிரமணியர், அபிராமி அம்மையார் சிற்பங்களும், தெற்குப் பக்கம் மகா சித்தி கணபதி, தட்சிணாமூர்த்தி சிற்பங்களும், கிழக்குப் பக்கம் அஷ்டபுஜ மகா காலபைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், பக்த ஆஞ்சநேயர் ஆகியோர் சிற்பங்களும் சிறுசிறு சந்நிதிகளில் காணப்படுகின்றன.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சின்னமனூரில் உள்ள புகழ்பெற்ற சிவகாமி அம்மன் கோயில், இலட்சுமி நாராயண பெருமாள் கோயில். மாணிக்கவாசகர் கோயில், குச்சனூரில் உள்ள சனீசுவர பகவான் கோயில், உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில், சமணப்பள்ளி மற்றும் சமணப் பள்ளியோடு இணைந்து இருக்கும் கருப்பசாமி கோயில், எல்லைப்பட்டி அருகே உள்ள அணையில் தலையில்லாப் புத்தர் சிலை
செல்லும் வழி
மார்க்கையன் கோட்டையில் இருந்து தென்கிழக்காக இக்கோயிலுக்கு என்று தனி பாதை ஒன்று உள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சின்னமனூர், உத்தமபாளையம், மார்க்கையன் கோட்டை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி, போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
கேட்பொலி
பாடுபவர் - இராணியம்மாள்