அய்யனார் கோயில்
Ayyanar Temple
தலத்தின் சிறப்பு
அய்யனார் மடியில் சிங்கம் அமர்ந்திருப்பது தனித்துவமானது. இக்கோயில் வேளாண்மை பெருக அருள் புரிகிறது. நீரைப் பகிர்ந்து கொடுக்கும் சக்தி உடையது.
மூலவர் பெயர்
அய்யனார்
தல மரம்
உடைமரம், வேம்பு
கோயில் குளம்/ஆறு
அய்யனார் குளம்
ஆகமம்
கிராமக் கோயில் வழிபாட்டு முறை
பூசைக்காலம்
வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி வெள்ளி பூசை மற்றும் மாசிப்பச்சைத் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய் பழம் படைத்தல், பலியிடல் - சேவல், கருங்கடா
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
இரண்டு குதிரை, பூதகணங்கள், சிவன், விஷ்ணு, முனிவர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள்
சுருக்கம்
இவ்விடத்தில் தனித்தனியே இரண்டு பீடங்களின் மேல் பிரம்மாண்டமான குதிரை சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் சிற்பத்தில் அய்யனார் ஒரு குதிரையின் மீது மடியில் சிங்கத்துடன் அமர்ந்துள்ளார். குதிரையின் முன் கால்களை இரு பூதகணங்கள் தங்கள்தலையின்மேல் தாங்கியபடி நின்றுள்ளன. குதிரையின் காலின்கீழ் பூதகணங்கள், சிவன், விஷ்னணு, முனிவர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள் ஆகியோர் உள்ளனர். இச்சிற்பத்திற்கு அருகில் உள்ள மற்றொரு குதிரைச் சிற்பத்தின் கீழ் பக்தர்கள் பல்வேறு பொருள்களை கொண்டு வந்து படைத்து வணங்குவது போல சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கோயில்பட்டி சிவன் கோயில்
செல்லும் வழி
கோயில்பட்டியிலிருந்து அய்யனார் குளம் செல்லும் வழியில் உள்ள கண்மாய்க்கரையின் கீழ் உள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விக்கிரமங்கலம் - அய்யனார் குளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
செக்கானூரணி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files