அங்காள பரமேஸ்வரி கோயில்
Angala Parameswari Temple
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி, மாசி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய் பழம் படைத்து அபிசேகம் செய்வது உண்டு. பொங்கல் வைத்தல், சேவல் மற்றும் கிடாய் வெட்டு, அம்மனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் சடங்கு ஆகியன செய்யப்படுகின்றன. அப்போது துந்துபி வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
கோவிலைச் சுற்றிலும் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எட்டு கைகளுடைய அய்யனார் சிற்பம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் அய்யனார் முறுக்குமீசை மற்றும் விரிசடையுடன் காட்சியளிக்கிறார். இவர் வில், அம்புகள், கேடையம், சங்கு போன்றவற்றை கைகளில் ஏந்தியுள்ளார்.
கோயில் அமைப்பு
கோபுரம், சந்நிதிகள், மண்டபங்கள் உண்டு
சுருக்கம்
அண்மையில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள இக்கோயில், ஊர்ப் பொதுத் தெய்வமாக வணங்கப்படுகிறது. குலக்குடிகளின் வம்சாவளிகள் வணங்கி வருகின்றனர். இங்கு மாசிப்பச்சை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் பொங்கல் வைக்கப்படுகிறது. இக்கோயிலைக் குல தெய்வமாக வழிபடுபவர்கள், பிறந்த குழந்தைக்கு இங்கு முதல் மொட்டை போட்டு, காது குத்தி, கிடாய் வெட்டிக் கொண்டாடுவதும் உண்டு. கோபுரம் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. பரிவாரத் தெய்வங்கள் 18 பங்காளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
செல்லும் வழி
மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் வாலாந்தூரின் வலப்பக்கம் உள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வாலாந்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files