Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

பெருமாள் கோயில், மாரநாடு கருப்பு கோயில், சீலைக்காரி கோயில்

Perumal Temple, Maranadu Karuppu Temple, Seelaikari Temple.

பிற தெய்வத்தின் பெயர்கள்

பெருமாள், கருப்பு, சீலைக்காரியம்மன்


கோயில் குளம்/ஆறு

வாலாந்தூர் கண்மாய்


பூசைக்காலம்

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.


ஊர்

வாலாந்தூர்

மாவட்டம்

மதுரை

திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பெருமாள் கோயிலில் அபிசேகம் நடைபெறுகிறது. மற்ற இரண்டு கோயில்களில் மொட்டை போடுவதும், கிடாய் வெட்டுவதும் நடைபெறுகிறது.
காலம்/ ஆட்சியர்
பெருமாள் கோயில் 300 ஆண்டு பழைமையைானதாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
இவ்விடத்தின் அருகில் ஒரு பீடத்தின்மேல் ஏழுகன்னிமார் சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
"இவ்வூரில் அருகருகில் மூன்று சிறு கோயில்கள் உள்ளன. 1. பெருமாள் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியன உள்ளன. கருவறையின் மேல் விமானம் இல்லாமல் முகப்புடன் காணப்படுகிறது. கருவறையில் பெருமாளுடன் அவரது இரண்டு தேவியரும் இருக்கின்றனர். இக்கோயிலில் வெள்ளிதோறும் சிறப்புப் பூசை நடைபெறுகிறது. 2. மாரநாடு கருப்பு சாமி கோயிலில் உள்ள கருப்புசாமி சக்தியான தெய்வமாக மக்களால் கருதப்படுகிறார். இக்கோயிலில் கிடாய் வெட்டு உண்டு. 3. வீரமரணமுற்ற ஆண்களைப் ’பட்டவன்' சாமியாக வணங்குவது போல, வீர செயல் புறிந்து மாண்ட பெண்களைச் ’சீலைக்காரியம்மன்’ தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இக்கோயிலில் மாசிப்பச்சைக்குப் பல்வேறு பொருட்களை வாங்கி வந்து, சாமியின் பெயரில் ஏலம் விட்டு, இலாபப் பணத்தைச் சாமியைப் பராமரிக்கப் பயன்படுத்திக் கொள்கின்ற வழக்கம் உள்ளது."
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

செல்லும் வழி
மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் வாலாந்தூரின் இடப்புறம் மூன்று கோயில்களும் உள்ளன
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files