Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

கல்யாணக் கருப்பு, முத்தாலம்மன், கோட்டைச்சாமி கோயில்கள்

Kalyana Karuppu Temple, Muthaalamman Temple, Kotaichami Temple

அமைவிடம்

ஆரியபட்டி ஊருக்குத் தெற்கே அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

கருப்பசாமி, முத்தாலம்மன், கோட்டைச் சாமி


பூசைக்காலம்

காலை முதல் மாலை வரை வழிபாடு நடைபெறும்.


ஊர்

ஆரியபட்டி

மாவட்டம்

மதுரை

திருவிழாக்கள் விவரங்கள்
மாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
மொட்டை போடுதல், கிடாய் வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல், சேவல் பலி, ஆகிய சடங்குகள் உள்ளன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
1.கல்யாணக் கருப்புக் கோயில் வளாகம் தூண் மண்டபங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குக் கொடிக் கம்பம் உண்டு, சிறிய முகப்பும் சந்நிதியும் உள்ளன. அருகில் சிறிய மண்டபமும் இருக்கிறது. 2. முத்தாலம்மன் கோயில் ஒரு சிறிய கோவிலாகும். இங்கு விழா நடத்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. 3. கோட்டைச் சாமி என்பது ஒரு திறந்வெளியில் பீடமாக உள்ளது. அப்பீடத்தில் அரிவாளும் சூலமும் வைத்து வணங்கப்படுகிறது.
சுருக்கம்
1. கல்யாணக் கருப்பசாமி - இக்கோயிலுக்கு வந்து திரும்பும் மகளிரைப் பாதுகாப்பாக வீடுவரை சென்று விட்டு வந்ததால் அதற்குக் கிடாய் வெட்டி வணங்குகின்றனர். இவ்வூர் வம்சாவளிகள் மொட்டை அடித்தல் கடைப்பிடிக்கின்றனர். மாசிப்பச்சை விழா இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2. முத்தாலம்மன் ஊரின் பொதுத் தெய்வமாகும். இக்கோயிலில் ஊர்மக்கள் அனைவரும் வழிபடுகின்றனர். மாவிளக்கு எடுக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை இங்குத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 3. கோட்டைச்சாமியை மக்கள் ஊரைக் காவல் காக்கும் வீரனாக வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் ஆரியபட்டிப் பிரிவில் இடப்புறம் செல்லவேண்டும்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆரியபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files