பெருமாள், காமாட்சியம்மன், காளி, கள்ளக்காமன், சீலைக்காரி, கருப்பசாமி கோயில்கள்
Perumal Temple, Kamakshi Amman Temple, Kali Temple, Kallakaaman Temple, Seelaikaari Temple and Karuppasami Temple.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தினவரி பூசைகள், பொங்கல் வைத்தல், பலியிடல் ஆகிய வழிப்பாட்டு முறைகள் உள்ளன.
சுருக்கம்
இவை ஒரே ஊரில் அமைந்த 6 சிறு வழிபாட்டுத் தலங்களாகும்.
1.பெருமாள் கோயில்- ஊரின் மேற்கே, திறந்தவெளியில் ஒரு பீடத்தில் பெருமாள் வைக்கப்பட்டுள்ளார். கொடிக்கம்பம் / தூண் போன்ற அமைப்பைப் பெருமாளாக வழிபடுகின்றனர்.
2. காமாட்சியம்மன் - ஊரில் உள்ள ஓர் பிரிவினர் இந்த அம்மனைக் குலசாமியாக வழிபடுகின்றனர். வம்சாவளிகள் மொட்டை அடித்தல், பெயர் வைத்தல், மாசிப்பச்சைக்கு வந்து வணங்குதல் போன்ற வழிபாடுகளைச் செய்கின்றனர்.
3. காளி - ஊரின் மேற்குப் பகுதியில், ஒரு நீள்கல்லாகக் காளி அமைந்துள்ளது. இக்கல்லை மஞ்சள் சேலையால் சுற்றி வைத்திருக்கின்றனர். கல்லின் மேல்பகுதியில் வேப்பமரக் குழையை வைத்து, அதைக் காளியின் முகம்போலப் பாவித்துள்ளனர். இது இவ்வூரின் பழைய தெய்வமாக இருக்கலாம்.
4. கள்ளக்காமன் கோயில் ஒரு சிறிய கோவிலாகும். இனக்குழுவிடையே சண்டையிட்டு மடிந்த ஒருவருக்குக் கல்தண்டு வைத்து வழிபட்டிருக்கின்றனர். பிற்காலத்தில் அக்கல்தண்டைச் சுற்றி ஓர் அறை கோயில் எழுப்பியுள்ளனர். இப்போது அவ்வீரனின் வம்சாவளிகள் மட்டும் இங்கு வழிபடுகின்றனர்.
5. கருப்புசாமி - காமாட்சியம்மனுக்குக் காவல் தெய்வமாக இருக்கும் இந்தக் கருப்புசாமி, ஊரின் பெரிய ஆலமரத்தின் அருகில் ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது. 18 படிகள் கொண்ட இந்த மண்டப அமைப்பும், பெரிய ஆலமரமும் கருப்பை உக்கிரமான தெய்வமாகக் காட்டுகின்றன. ஊர்க் கடா வெட்டு இங்குத்தான் நடைபெறுகிறது.
6. சீலைக்காரியம்மன் - இக்கோயில் ஊரின் மேற்குப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. ஊரின் குறிப்பிட்ட சமூகங்களே இங்கு வழிபடுகின்றனர். தீயில் மாய்ந்துபோன பெண்ணின் நினைவாகக் இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. பின்னர் அப்பெண் தனது வம்சாவளிகளால் அம்மனாக வழிபடப்படுகிறார். இங்குப் பொங்கல் மற்றும் படையல் வைக்கப்படுகின்றன.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
குப்பணம்பட்டி, ஆரியபட்டி, ஆணையூர் கோயில்கள்
செல்லும் வழி
மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில் குப்பணம்பட்டியிலிருந்து இடப்புறம் சென்றால் கன்னியம்பட்டி வரும்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கன்னியம்பட்டி,குப்பணம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files