Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

அன்னபூரணி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோயில்

Annapoorani and Thiruneelakanteswarar Temple

கோயிலின் வேறு பெயர்

சிவன் கோயில், ஈஸ்வரன் கோயில்


தலத்தின் சிறப்பு

இங்குள்ள சிவலிங்கத்தை அகத்தியர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தென்புலத்து வாழ்நர்களுக்கு மோட்சம் வழங்கும் தலமாக விளங்குவதாக இப்பகுதி மக்களால் கருதப்படுகிறது.


மூலவர் பெயர்

திருநீலகண்டேஸ்வரர்


ஊர்

குள்ளப்புரம்

மாவட்டம்

தேனி

தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
வராக நதி
பூசைக்காலம்
பக்தர்களின் வருகையைப் பொறுத்துக் கோயில் திறக்கப்படுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி நவராத்திரி, பிரதோஷ வழிபாடு, சஷ்டி விரதம், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், ஆவணி வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கல்வெட்டு / செப்பேடு
பாண்டியர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
சிற்பங்கள்
பழங்கால ஆறுமுக முருகன் சிலை, நான்முகன், துர்க்கை அம்மன், மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சந்திரன், சூரியன், பைரவர், அம்மன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், நந்தி
கோயில் அமைப்பு
திருநீலகண்டேஸ்வரர் கருவறைக்கு மேல் ஓரடுக்கு விமானம் உள்ளது. கருவறைக்கு முன் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அன்னபூரணி அம்மன், முருகன் - வள்ளி -தெய்வானை, மூல விநாயகர் ஆகியோர்களுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன.
சுருக்கம்
அன்னபூரணி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலைச் சிவன் கோயில் என்றும், ஈஸ்வரன் கோயில் என்றும் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். திருநீலகண்டேஸ்வரர் கருவறைக்கு மேல் சிறிய விமானம் உள்ளது. அன்னபூரணி அம்மன், முருகன் - வள்ளி -தெய்வானை, மூல விநாயகர் ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன. கருவறைக்கு முன் மண்டபம் உள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தை அகத்தியர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இங்குப் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. சிறப்பான கட்டடக்கலை அமைப்பைப்பெற்ற இக்கோயில் பிற்காலப் பாண்டிய மன்னர்களால், பொது ஆண்டு 12-13ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டு இருக்கலாம். இக்கோயிலின் அருகில் வராக நதி உள்ளது.
கூடுதல் விவரங்கள்
திருநீலகண்டேஸ்வரர் கருவறையின் வெளியே விநாயகர், நாகர், சிறிய முருகர் சிலை ஆகியன உள்ளன. அம்மன் சந்நிதி விமானத்துடன் கூடிய கருவறையுடன் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12-13ஆம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சௌந்தரராஜ பெருமாள் கோயில்
செல்லும் வழி
தேனியிலிருந்து குமுளி செல்லும் பாதை.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குள்ளப்புரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
கம்பம், உத்தமபாளையம்

மீடியா கோப்புகள் இல்லை

No media Files