கோயில் பெட்டி வீடு
Kovil Petti Veedu
திருவிழாக்கள் விவரங்கள்
மாசிப்பச்சை திருவிழா கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய், பழம், பத்தி, சூடம் வைத்து வணங்குகின்றனர்
காலம்/ ஆட்சியர்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர்.
சுருக்கம்
நாட்டார் வழிபாட்டில், குலசாமிகளுக்கு அணிவிக்கப்படும் ஆடை, அலங்காரப் பொருட்கள், வளரி, சலங்கை போன்றவற்றைத் திருவிழாக் காலங்களில் மட்டுமே பயன்படுத்துவர். மற்ற நேரங்களில் அவற்றை ஒரு பெட்டியில் போட்டு மூடி, அதற்கென்று கட்டப்பட் வீட்டில் வைப்பர். காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் புனிதமான சாமிப் பொருட்களைக் கோயிலில் வைப்பதை விட ஊரின் நடுவில் பெட்டி வீடு என்ற ஒன்றைக் கட்டி அதில் வைப்பதை இப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோயில் வீடு என்பதன் இன்னொரு பரிமாணம் இந்தப் பெட்டி வீடுகள். மூலவர் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப் பெட்டி வீடு கட்டப்படும். பரிவாரத் தெய்வங்களுக்கான பங்காளிகள் பல கிராமங்களில் இருப்பர். பெட்டி எடுக்கும் சடங்கின் வழி அந்தக் கிராமங்கள் ஒற்றுமையாகத் திரள்கின்றன. திருவிழாச் சமயத்தில் பெட்டி வீட்டிலிருந்து பூசை செய்து, சாமிவருந்தி, கொட்டு மேளம் அடித்து, சாமியாடி உறவினர்கள் கூட்டமாகக் குலசாமி கோயிலுக்குச் செல்வர். பெட்டி சென்ற பின்பே கோயிலுக்கு முழுமையான சக்தி கிடைக்கும் என்று நம்புகின்றனர். பெட்டி வராமல் கோயில் பூசையோ, மக்கள் வழிபாடோ செய்வதில்லை. மதுரை வட்டாரத்தில் பெட்டி வீடு என்பது பெரும்பாலான கோயில்களுக்கு உண்டு. இது குடிகளின் உரிமையாகும். குலசாமி கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் பெட்டி வீட்டில் சூடம் வைத்து வழிபட்டுச் செல்வதும் உண்டு. பல ஊர்களின் பெட்டியை ஒரு ஊரில் வைக்கும் முறையும் உண்டு. கன்னியம்பட்டியில் காமாட்சியம்மனை வழிபடும் பங்காளிகள் உருவாக்கிய இந்தப் பெட்டி வீடு, மூன்று வகையறாக்களுக்குப் பாத்தியப்பட்டது ஆகும்.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பெருமாள் கோயில், காளியம்மன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குப்பணம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files