கண்மாய்க்கரைப் பிள்ளையார் கோயில்
Kanmaikkarai Pillaiyar Temple
அமைவிடம்
விக்கிரமங்கலம் கண்மாய்க்கரையில் தனிக்கல் ஒன்றில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு
பிற்காலப் பாண்டியர் காலத்தில் குளம், ஆறு, கண்மாய்க்கரைகளில் தான் முதலில் விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கோயில் ஆதாரமாகவுள்ளது.
மூலவர் பெயர்
கண்மாய்க்கரைப் பிள்ளையார்
ஊர்
அய்யனார் குளம்
மாவட்டம்
மதுரை
கோயில் குளம்/ஆறு
விக்கிரமங்கலம் கண்மாய்
ஆகமம்
கிராமக் கோயில் வழிபாட்டு முறை
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
விநாயகர் சதுர்த்தி நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படும்
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
சைவ முறையில் படையல்
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
விநாயகர் புடைப்புச் சிற்பம் மட்டுமே உள்ளது.
கோயில் அமைப்பு
கண்மாய்க்கரையில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது
சுருக்கம்
ஒரு தனிக்கல்லில் விநாயகரைப் புடைப்புச் சிற்பமாக வடித்திருக்கிறார்கள். விநாயகர் தன் கையில் அங்குசம், பாசம், மோதகம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு ஒரு காலைப் பீடத்தின் மீது மடக்கிப் படுக்கையாக வைத்து, மற்றொரு காலை மடக்கி நிறுத்தியமைத்த (லலிதாசனம்) அமர்வில் காணப்படுகிறார். மதுரை வட்டாரத்தில் விநாயகர் தனியாகக் குளம் மற்றும் கண்மாயில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பது தனித்துவமானதாகும். இச்சிற்பம் பொது ஆண்டு 13- 14 ஆம் நூற்றாண்டான பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பிற்காலப் பாண்டியர் காலம், தோராயமாக 13- 14 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
தல வரலாறு / கதைகள்
கண்மாய்ப் பாசனமும் வேளாண்மையும் சிறப்பாக அமைவதற்காக தனிக்கல்லில் உருவாக்கப்பட்ட சிலைக் கோயில் இது.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கோயில்பட்டி சிவன் கோயில்
செல்லும் வழி
விக்கிரமங்கலம், கோயில்பட்டியிலிருந்து அய்யனார் குளம் செல்லும் வழியில் அய்யனார் குதிரைக்கு அருகில் அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோயில்பட்டி, அய்யனார் குளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
செக்கானூரணி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files