சுந்தரபுரீஸ்வரர் கோயில்
Sundarapureeswarar Temple
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பிரதோஷ நாட்களில் சிறப்புப் பூசை நடைபெறும்.
கோயில் அமைப்பு
கருவறை, மண்டபங்கள், சந்நிதிகள் ஏதுமின்றிச் சிவலிங்கம் மட்டும் எஞ்சியுள்ளது.
கூடுதல் விவரங்கள்
இவ்வூர் சுந்தரபாண்டியம் என்ற பெயரைக் கொண்டுள்ளதாலும், பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் இப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளதாலும், லிங்கத்தின் உருவ அடிப்படையிலும், இந்த லிங்கம் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்
தல வரலாறு / கதைகள்
இங்குத் திறந்தவெளியில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இதற்கு அருகில் ‘ஸ்ரீ சுந்தரபுரீஸ்வரர்’ என்ற பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் முற்காலத்தில் ஒரு சிவன் கோயில் இருந்து அழிந்திருக்க வேண்டும். மேலும் இப்போது ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம் மாட்டுமே எஞ்சியுள்ளது. எனினும் இவ்வூர் மற்றும் அருகிலுள்ள ஊர் மக்களும் இன்றளவும் இந்தச் சிவலிங்கத்தை வழிபட்டுச் செல்கின்றனர்
தகவல்
முனைவர் கந்தசாமி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
-
செல்லும் வழி
கிருஷ்ணன்கோயிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சுந்தரபாண்டியம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருவில்லிப்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
கிருஷ்ணன்கோயில்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files