பறவை அன்னம் காத்தார் கோயில்
Paravai Annam Kaathaar Temple
பூசைக்காலம்
இரண்டு காலப் பூசை நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
பிரதோஷ வழிபாடு உட்படச் சிவனுக்கு உகந்த நாட்களில் பூசைகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
அபிஷேக ஆராதனை, நைவேத்தியம் செய்து பிரசாதம் படைக்கப்படுகிறது
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை ஸ்ரீ வல்லபா, இரண்டாம் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் மற்றும் இதர (மன்னர் பெயர் குறிப்பிடாதக்) கல்வெட்டுகள் ஆகும். இங்குள்ள கல்வெட்டொன்றில், ‘ இராசவல்லிபுரத்தைச் சேர்ந்த ஒருவாருணர்ந்தான் எனக்கு நல்லபெருமாள் என்பவரின் பெயரால் இங்கு ’எனக்கு நல்லபெருமாள் மடம்’ என்ற மடமொன்று செயல்பாட்டிலிருந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் சுந்தரபாண்டியனின் கல்வெட்டொன்றிலிருந்து (பொது ஆண்டு 1248 - 49) திருவாரூர் கிருஷ்ணகோளகி மடத்தலைவரின் சீடரான ஈசானதேவருக்கும், ’எனக்கு நல்லபெருமாள்’ மடத்திலுள்ள சீடர்களுக்கும், மன்னன் மடப்புறமாகப் 12 மா நிலம் வழங்கியிருந்தமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வேறு சில கல்வெட்டுகளும், இம்மடத்திற்கு வழங்கப்பட்டிருந்த நிலவிபரங்களைக் குறிப்பிடுவனவாகக் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டளவில் இந்த மடம் மிகச் சிறப்பான நிலையிலிருந்துள்ளமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பறவை அன்னங்காத்தர் கோயிலின் (பரன்னங்காத்தார் கோயிலின் ) கருவறை நுழைவாயிலிலுள்ள கல்வெட்டிலிருந்து அந்த நிலைக்காலையும், படியையும் வாள்வல்ல பாண்டியதேவன் என்பவர் செய்தளித்துள்ளமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஸ்ரீவல்லப பாண்டியனின் கல்வெட்டொன்றிலிருந்து (பொது ஆண்டு 1297) இக்கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்த நந்தாவிளக்குக்கான கொடை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
சிற்பங்கள்
ஆறுமுகம் கொண்ட முருகன் சிற்பம் மிகவும் பழைமையானதாகவும் கலைநயம் மிக்கதாகவும் உள்ளது. அம்பாள் சிற்பமும் உள்ளது.
கோயில் அமைப்பு
கருவறையும் முகமண்டபமும் உள்ளன.
சுருக்கம்
இந்தக் கோயில் சிவபெருமானுக்காக எடுக்கப்பட்ட கோவிலாகும். இவ்விடத்தைச் சுற்றிக் கோயிலின் கல்லாலான பாகங்கள், கட்டுமானக் கற்கள், தூண்துண்டுகள், கல்வெட்டுப் பாகங்கள்-சிதறிக் கிடக்கின்றன. இதை வைத்துப் பார்க்கும் போது பழைமையான இக்கற்கோயில் கடந்த காலத்தில் ஒரு பெரிய வளாகமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. கோயிலின் கருவறையில் சிவன் லிங்க ரூபத்தில் உள்ளார். கருவறைக்கு வெளியில் வலப்பக்கம் அம்பாளும், இடப்பக்கம் முருகன் சிலையும் உள்ளன. சிவனைப் பார்த்தவாறு நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படுகின்ற கல்வெட்டுப் பாகங்கள், பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில், பாண்டியர் ஆட்சியில் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்களையும், பிற தானங்களையும் பற்றிக் கூறுகின்றன.
தகவல்
முனைவர் கந்தசாமி
குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2, (2009) , பக்கம் 166 மற்றும் 167 .
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
முதுகுடி - ஒரு சிறிய மலைக் குன்று
செல்லும் வழி
இராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோயில் செல்லும் பாதை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராஜபாளையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
இராஜபாளையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
இராஜபாளையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files