Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

சிவன் கோயில்

Shiva temple

கோயிலின் வேறு பெயர்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்


திருவிழாக்கள் விவரங்கள்

சிவன் மற்றும் நந்திக்கு உகந்த நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.


கல்வெட்டு / செப்பேடு

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்தியதாகும். இப்போது ஈஞ்சார் என்றழைக்கப்படும் இவ்வூர், கல்வெட்டுகளில் ’மல்லி நாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊர்

ஈஞ்சார்

மாவட்டம்

விருதுநகர்

கோயில் அமைப்பு
விமானம் மற்றும் கோபுரப்பகுதி இடிந்துள்ளது. கருவறை, அரைமண்டபம், மாமண்டபம் ஆகியன உள்ளன.
சுருக்கம்
பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சிவன் கோயில் பழம்பொலிவோடு காட்சி தருகின்றது. கருவறை, அரைமண்டபம், மாமண்டபம் என்ற முறையான கட்டடக் கலையுடன் காணப்படுகின்றது. விமானப் பகுதி முற்றிலுமாக அழிந்து விட்டது. எனவே இக்கோயில் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. நந்தியின் சிற்பம் சந்நிதிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோயிலுக்குத் திருப்படிமாற்றுள்ளிட்ட (இறைவனுக்கு நிவேதிப்பதற்கான பொருளைத் தயாரிக்க வேண்டிய அரிசி முதலிய பண்டங்கள்) தேவைகளுக்காக நிலத் தானம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது. மற்றொரு கல்வெட்டு இவ்வூரில் நிலவிய பல்வேறு அரசு வரிகளைப் பற்றித் தெரிவிக்கின்றது. இம்மன்னனின் காலத்தில் 'குருகுலத்தரையன் சோழன் உய்ய நின்றாடுவான்' என்பவன் இக்கோவிலை எழுப்பினான் என்று அக்கல்வெட்டின்வழி அறிய முடிகின்றது. இக்குருகுலத்தரையன் என்ற சிற்றரசனும் அவன் வம்சத்தாரும் பல்லாண்டுகளாக ஈஞ்சார்ப் பகுதியில் வாழ்ந்து வந்ததாகக் கருதப்படுகின்றது.
கூடுதல் விவரங்கள்
முற்காலப் பாண்டியர் காலத்து சுப்பிரமணியர் சிலை ஒன்று இவ்வூரில் கிடைத்தது. இதன் மூலம் இப்பகுதியில் தொன்மையான சிவன் கோயில் இருந்து அழிந்திருக்கலாம் என்று தெரிகிறது. இச்சிலை இப்போது இக்கோயிலின் அருகில் தனிச் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு; முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். (1216 - 1238)
தகவல்

முனைவர் கந்தசாமி

குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட வரலாறு; கல்வெட்டுச் சொல்லகராதி- பக்கம் 58.
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இக்கொவிலுக்கு அருகில் ஆலடி ஈஸ்வரன் கோயில் மற்றும் சதிக்கல் உள்ளன.
செல்லும் வழி
மதுரையில் இருந்து விருதுநகர் வழியாகச் சிவகாசி செல்லும் வழியில் அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிவகாசி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சிவகாசி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
சிவகாசி தங்கும் விடுதி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files