அங்காள ஐயன், கண்ணாயி, பூங்கன்னி கோயில்
Angala Ayyan, Kannaayi, Poonganni Temple
மூலவர் பெயர்
அய்யனார்
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி,பங்குனி, மார்கழி, ஆடி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இங்கு மாசிப்பச்சைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
யானை, குதிரை மற்றும் ஏழு கன்னிமார் சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
பொன்னாங்கன் வழிவந்த உலகநாதனை மணக்க விரும்பிய ஒச்சாண்டம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் இக்கோயில் ஒச்சாண்டம்மன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது.
கோயில் அமைப்பு
கருவறை கிழக்குப் பார்த்து உள்ளது. 21 பரிவாரத் தெய்வங்களுக்கு தனித்தனியே அறையும், பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில், மொத்தம் 42 தெய்வங்கள் உள்ளன. தனது வம்சாவளிகள் சிதறிப்போகாமல் இருக்க, அவர்களுக்குச் சாமியில் பங்கு கொடுத்து, உரிமையாக இணைத்துக்கொண்டு, இனக்குழுப் பெருக்கத்திற்கேற்பப் பரிவாரத் தெய்வங்களின் பெருக்கமும் இருக்கிறது. இங்குப் பல சிறு சந்நிதிகள், கொடிமரம், வழிபாட்டுத் தூண், யானைவாசல், குதிரைவாசல் மற்றும் தனிச் சிற்பங்கள் உள்ளன.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
குறிப்புகள்
எழுத்தாளர் சுந்தரவந்தியத்தேவன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கொங்கர்புளியங்குளம், கிண்ணிமங்கலம்,திடியன் கோயில்.
செல்லும் வழி
கருமாத்தூர் - உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் வடக்குப்பக்கம் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செக்கானூரணி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
செக்கானூரணி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files