Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

பேச்சி, விருமன், மாயன் கோயில்

Pechchi, Viruman, Maayan Temple

கோயிலின் வேறு பெயர்

விருமாண்டி கோயில்


தலத்தின் சிறப்பு

மூன்று சாமிகளும் ஒரே வளாகத்தில் அமைந்து அருள் புரிகின்றனர்.


மூலவர் பெயர்

பேச்சி, விருமாண்டி, மாயன்


ஊர்

கருமாத்தூர்

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
உச்சிப் பூசை நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடிவெள்ளி பூசை மற்றும் மாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
சுருக்கம்
இக்கோயிலில் பேச்சி, விருமன், மாயன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. 1. விருமாண்டி- கருமாத்தூரில் மூன்று சாமிகளுக்கும், 24 பட்டிகளுக்கும் காவல் தெய்வம் விருமாண்டியாகும். பேச்சியின் அழைப்பின் பேரில் வந்த விருமாண்டி பேய்க்காமனோடு சமர் புரிந்து பேச்சிக்கு இடத்தை உரிமையாக்கினார் என்பதால், இவ்விடத்தில் பேச்சியும் விருமாண்டியும் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். விருமாண்டிக்குத் தனி விழா எடுக்கப்படுவதில்லை. உச்சிப் பூசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் தலைமைக் காவல் தெய்வமாக விருமாண்டி வணங்கப்படுகிறார். 2. மாயாண்டி - இங்குப் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாக மாயாண்டி வழிபடப்படுகிறார். பல குலவழக்கத்திலும் மாயன் வழிபாடு உண்டு. இவர் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாகக் கருதப்படுகின்றார். மழைவேண்டி மாயனை வழிபாடு செய்யும் பழக்கமும் உண்டு. 3. பேச்சி - தமிழ்ச் சமூகத்தில் பல குலவழக்கத்திலும் பேச்சியம்மன் வழிபாடு உள்ளது. கருமாத்தூர் வட்டாரக் கோயில்கள் எல்லாவற்றிலும் பரிவாரத் தெய்வங்களில் பேச்சி வழிபாடு காணப்படுகிறது. மக்கள், இங்குள்ள அம்மனைத் தலைமைப் பேச்சியாக வழிபடுகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

செல்லும் வழி
கருமாத்தூர் - வடக்கம்பட்டி சாலையில் கிழக்குப்பக்கமாக வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருமாத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
காமராசர் பல்கலைக்கழகம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
செக்கானூரணி

மீடியா கோப்புகள் இல்லை

No media Files