நல்லூத்து கருப்பசாமி கோயில், சோனமுத்தையா கோயில்
Nalluthu Karuppasami Temple and Sonamuthaiya Temple.
மூலவர் பெயர்
கருப்பசாமி, முத்தையா
தல மரம்
ஆலமரம்
கோயில் குளம்/ஆறு
தாமரைக்குளம்
பூசைக்காலம்
ஆறுகாலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பொங்கல், அபிசேகம், கிடாய் வெட்டு நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான தலமாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
இங்கு வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
மலையின் கீழ் அமைந்துள்ள இக்கோயிலுக்குக் கோபுரம் இல்லை. தூண் மண்டபங்கள் மற்றும் இரு கருவறைகள் உள்ளன.
சுருக்கம்
கோயிலுக்கு உள்ளே இரண்டு காவல் தெய்வங்கள் - கருப்பசாமி, முத்தையா - உள்ளனர். கோயிலுக்கு வெளியே பெரிய குதிரைச் சிற்பம் உள்ளது. குதிரையின் மேல் கருப்பு சாமி போன்ற ஒருவர் அமர்ந்துள்ளார். குதிரையின் கால்களைத் தாங்கியபடி இரண்டு பூதகணங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. முற்காலத்தில், மலையின் அடிவாரத்தில் இயற்கைக் குகை போன்ற அமைப்பில் இந்தச் சாமிகள் வழிபடப்பட்டன, பின்பு அவ்விடத்தைச் சுற்றிக் கோயில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சிவன் கோயில்
செல்லும் வழி
செல்லம்ப்ட்டியிலிருந்து இடப்புறம் திடியன் சென்றால் ஊரின் மேற்கே கோயில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திடியன், செல்லம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files