அருள்மிகு அம்மச்சியார் அம்மன் என்ற வெந்நீர் கொண்டாள் கோயில்
Amachiyaar Amman Temple/ Venneer Kondaal temple
தல மரம்
மகாலிங்க மரம் / மருதம்
கோயில் குளம்/ஆறு
வெந்நீர் கொண்டாள் கண்மாய்
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பௌர்ணமி மற்றும் விசேஷக் காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். வைகாசி, மார்கழி மாதம் எட்டு நாட்கள் திருவிழா, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஆடு, கோழி, மீன், கருவாடு ஆக்கிப் படைத்தல்
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கருவறையில் கற்சிற்பம் மற்றும் முன்மண்டபத் தூண்களில் சுதைச் சிற்பங்கள் உள்ளன
தல வரலாறு / கதைகள்
வெந்நீர் கொண்டாள் கண்மாயில் இளம்பெண் ஒருத்தி குளித்து வந்ததாகவும், அதைத் தவறான நோக்கில் பார்த்த ஆடு மாடு மேய்க்கும் ஒருவன் கண்மாயில் இறங்கிய போது கண்மாய் நீர் வெந்நீராக மாறி அவனது உயிரைப் பலி வாங்கியது. அப்போதிலிருந்து அந்த இளம்பெண்ணும் கடவுளாக மாறி அந்தக் கரையோரத்தில் இருப்பதாக ஊர் மக்கள் நம்புகின்றனர். அவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபட்டும் வருகின்றனர்.
கோயில் அமைப்பு
கருவறையும் நீளமான முன் மண்டபமும் உள்ளன. பழைமையான கோயில்; இப்போது முழுவதும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
வெந்நீர் கொண்டாள் அம்மச்சியார் அம்மனைச் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதி இவ்வூர் மக்கள் வணங்குகின்றனர். குளித்து நீராடி விட்டுத் தான் கோயிலுக்கு உள்ளே வருகின்றனர்
தகவல்
முனைவர் கந்தசாமி
செல்லும் வழி
குன்னூரில் இருந்து நத்தம் பட்டி செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னூர் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருவில்லிப்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
கிருஷ்ணன் கோயில்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files