சொக்கநாதர் கோயில்
Chokkanathar Temple
தலத்தின் சிறப்பு
சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமான் நாயனாரும் சேர்ந்து வந்து வழிபட்ட கோயில் இதுவேயாகும் என்பர்.
மூலவர் பெயர்
சொக்கநாதர்
ஆகமம்
காரணம் / காமிகம்
பூசைக்காலம்
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
தைத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வழிபடுவர்.
கல்வெட்டு / செப்பேடு
திருப்பரங்குன்றத்துக் கோயில் கோபுரத்தில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம் பொதுஆண்டு 1583 இல் கச்சிப் பெருஞ்செல்வன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற கிருஷ்ணவீரப்ப நாயக்கரால் கோபுரத்திற்கு அருகில் விசுவநாத நாயக்கரின் நினைவாக ஒரு கல்மடம் கட்டப்பட்டது. அதில் விநாயகரின் உருவம் ஏற்படுத்தப்பட்டது என்ற குறிப்புக் காணப்படுகிறது.
சிற்பங்கள்
விசுவநாத நாயக்கரின் நினைவாக கட்டப்பட்ட கல்மடத்தில், விநாயகரின் உருவம் காணப்படுகிறது. இங்குள்ள தூண் சிற்பங்களில் பல்வேறு தோற்றங்களில் விநாயகர் உருவங்கள் காணப்படுகின்றன. ஒரு விநாயகர் வணங்கும் கோலத்திலும், குள்ளபூதத்தின் மேல் நர்த்தனம் செய்யும் கோலத்திலும், வலக்கையில் தண்டம் வைத்துள்ள கோலத்திலும் மற்ற மூன்று விநாயகர்கள் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிய கோலத்திலும் உள்ளனர். இங்கு நான்முகன், முருகன், இந்திரன், திருமால் ஆகிய சிற்பங்களும் உள்ளன. சேரமான் பெருமாள் நாயனாரின் சிற்பம் ஒன்றும் உள்ளது.
கோயில் அமைப்பு
பதினாறுகால் மண்டபத்திலிருந்து குடைவரைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் கிழக்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. இதன் முன்புறம் கோபுரங்கள் ஏதும் இன்றி, ஒரு பெரிய மண்டபம் போல இது காட்சிதருகிறது.
கூடுதல் விவரங்கள்
கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்ட கல்மடம் தான் இன்று சொக்கநாதர் கோயில் என்ற பெயரில் உள்ளதாகக் கருதப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1583, கிருஷ்ணவீரப்ப நாயக்கர்.
தல வரலாறு / கதைகள்
இங்கு லிங்கத்திற்கான கருவறையொன்றும், தனி அம்மன் கோயில் ஒன்றும் உள்ளன. இம்மூர்த்தங்களை மீனாட்சி, சொக்கநாதர் என்று கூறுகிறார்கள். இக்கோயில் மண்டபத்தில் சேரமான் பெருமாள் நாயனார் சிலை இருப்பதால், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமான் நாயனாரும் சேர்ந்து வந்து வழிபட்ட கோயில் எனக் கருதப்படுகிறது.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சுப்ரமணியமணிய சுவாமி திருக்கோயில்
செல்லும் வழி
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
அருகே நாள் வாடகைக்குத் திருமண மண்டப அறைகள் உள்ளன. மேலும் விடுதிகளும் உள்ளன
மீடியா கோப்புகள் இல்லை
No media Files