பழனியாண்டவர் கோயில்
Palaniandavar Temple
கோயிலின் வேறு பெயர்
முருகன் கோயில்
அமைவிடம்
குன்றின் வடமேற்குப் பகுதியில் காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
இக்கோயிலின் பின்புறம் மலைச்சரிவில் செஞ்சி நாயக்கரின் கல்வெட்டு ஒன்றுள்ளது. கோயிலின் தென்புறத்தில் சிறிய சுனையொன்று உள்ளது. மகாவீரர், பார்சுவநாதர், இயக்கன் மற்றும் இயக்கி ஆகியோரின் சிலைகளும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. இவை 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றன
ஊர்
திருப்பரங்குன்றம்
மாவட்டம்
மதுரை
மூலவர் பெயர்
பழனியாண்டவர்
ஆகமம்
காரணம் / காமிகம்
பூசைக்காலம்
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழிபாடு நடைபெறும்.
சிற்பங்கள்
இக்கோயிலின் மண்டபங்கள், தூண்கள் அனைத்திலும் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கலைப்பாணியைக் கொண்டு விளங்குகின்றன. இக்கோயிலில் அர்த்த மண்டபத் தூண் ஒன்றில் திருமலை நாயக்கர் தம் தேவியருடன் நித்திய அஞ்சலி செய்யும் கோலத்தில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். இக்கோயிலில் திருமலைநாயக்கர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டிருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது.
கோயில் அமைப்பு
குன்றின் வடமேற்குப் பகுதியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் பழனியாண்டவர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலுக்கும், குடைவரைக் கோயிலுக்கும் நடுவில், மலையையொட்டிய பாதை முன்பு இருந்துள்ளது. அது காலப் போக்கில் சீர்கேடு அடைந்து விட்டதால், குடைவரைக் கோயிலின் இரத வீதியே இப்போது பாதையாய் அமைந்துள்ளது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 16 - 17ஆம் நூற்றாண்டு
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
காசி விஸ்வநாதர் கோயில்
செல்லும் வழி
குன்றின் வடமேற்குப் பகுதியில், காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
திருப்பரங்குன்றம் கோவிலை ஒட்டி எண்ணற்ற விடுதிகளும் நாள் வாடகைக்கு அறைகளும் உள்ளன.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files