ஆறுமுகநயினார் கோயில்
Aarumuganainar Temple
கோயில் குளம்/ஆறு
சரவணப்பொய்கை
பூசைக்காலம்
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இங்குள்ள குடைவரைக் கோயிலின் திருவிழாக்களின் போது பெரிய கோயிலின் முருகன் - தெய்வானை உலோகத் திருமேனிகள் (உற்சவ மூர்த்தங்கள்) இங்கு ஒருநாள் திருக்கண் வைத்துத் திருவீதியுலா வருகிறார்கள்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 16 - 18ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
மூலவர் சிற்பம் ஆறு முகங்களையும், பன்னிரு கைகளையும் கொண்டு, நின்ற கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு / கதைகள்
இங்குள்ள மலைப்பகுதியில், நக்கீரர் இருந்து சிவபூசை செய்த இடம் பஞ்சாட்சரப்பாறை என்றும், அதையடுத்துள்ள ஒரு சிறிய குகையை நக்கீரர் குகை என்றும் பெயரிட்டுத் தல வரலாற்றுக் கதைகள் கூறுகின்றனர்.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் மற்றும் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
காசி விஸ்வநாதர் கோயில்
செல்லும் வழி
குடைவரைக் கோயிலுக்குக் கிழக்கே, ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
திருப்பரங்குன்றம் கோவிலை ஒட்டிய வீதியில் விடுதிகள் உள்ளன.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files