கன்னிமார் கோயில்
Kannimaar Temple
மூலவர் பெயர்
ஏழு கன்னியர்
பூசைக்காலம்
திறந்த வெளி கோயில் என்பதால் எல்லா நேரங்களிலும் பூசை செய்யலாம்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் பௌர்ணமியன்று பாற்குடம் மற்றும் தீச்சட்டி எடுப்பதும், ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று காவடி எடுப்பதும் இங்கு நடைபெற்று வருகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இங்கு விலங்குகள் பலியிடும் வழக்கம் இல்லை. எலுமிச்சம் பழத்தை அரிந்து, குங்குமம் தோய்த்துப் படைக்கும் வழக்கம் உள்ளது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
ஏழு கன்னிமார்களின் கற்சிற்பம் உள்ளது.
கோயில் அமைப்பு
மலையின் கீழே திறந்த வெளியில் சிறு கல்லில் ஏழு கன்னியர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கன்னித் தெய்வங்கள் எழுவரும், உடன் பிறந்தோர் என்றும் பல கருத்துக்கள் உள்ளன. இன்றும் கிராமங்களில் ஐயனார் கோயில்களில் ஏழு கற்களை வைத்துக் கன்னிமார் தெய்வங்கள் என்று வணங்கும் வழக்கம் உள்ளது. கன்னித் தெய்வங்களை வழிபடும் வழக்கம் பலகாலமாக மக்களிடையெ இருந்துவருகிறது.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில்
செல்லும் வழி
தென்பரங்குன்றம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
திருப்பரங்குன்றத்தில் தங்கும் வசதி உள்ளது
மீடியா கோப்புகள் இல்லை
No media Files