வழிவிடு முருகன் கோயில்
Vazhividu Murugan Temple
மூலவர் பெயர்
முருகன்
திருவிழாக்கள் விவரங்கள்
முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய், பழம், பூ, எலுமிச்சம்பழம் ஆகியன வைத்து வழிபாடு நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 150 ஆண்டுகள் பழைமையான கோவிலாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
முருகன் மூலவராக நின்ற நிலையில் காணப்படுகிறார்.
தல வரலாறு / கதைகள்
மதுரையிலிருந்து குற்றாலம் வரை செல்லக்கூடிய பாதை முற்காலத்தில், குறிப்பாகப் பாண்டியர் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் போதும், வணிகப் பாதையாக இருந்திருக்கலாம். ஏனெனில் இவ்வழிநெடுகிலும் தங்குவதற்கான சத்திரங்களும், கல் மண்டபங்களும், நகரா மண்டபங்களும் காணப்படுகின்றன. பல காலங்களாகவே இப்பகுதியில் வாகனத்தில் செல்லும் போது மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ’வழிவிடு முருகனை’ வணங்கிவிட்டு எலுமிச்சம்பழத்தைக் கொண்டு வாகனத்தின் சக்கரங்களில் வைத்துச் செல்லும்போது பயணம் பாதுகாப்பாக அமையும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கோயில் அமைப்பு
இச்சிறு கோயிலின் பின்பகுதியில் ஒரு மண்டபம் உள்ளது. கருவறையின் மேல், ஓர் அடுக்கு விமானம் காணப்படுகிறது.
சுருக்கம்
இக்கோயிலில் மூலவரான ’வழிவிடு முருகன்’ சந்நிதிக்கு அருகில் “எடுத்தாட வலிய பிள்ளையார் ' என்ற பிள்ளையார் சந்நிதியும் உள்ளது. நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், மதுரையில் இருந்து திருவில்லிப்புத்தூர் வரை, குறிப்பாகக் கிருஷ்ணன் கோயில் வட்டாரப் பகுதியில், நிறையக் கல் மண்டபங்கள் அமைந்துள்ளன. இப்படியாகக் கட்டப்பட்ட இந்த மண்டபம் சிலகாலம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. பின்பு புது மண்டபமாகப் புதுப்பிக்கப்பட்டு, இவ்விடத்திலேயே வழிவிடு முருகனுக்குக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது
தகவல்
முனைவர் கந்தசாமி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மூவரை வென்றான் குடைவரைக் கோயில்
செல்லும் வழி
திருவில்லிப்புத்தூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழி உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவில்லிப்புத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருவில்லிப்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருவில்லிப்புத்தூர்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files