அம்பலவாணன் சிவகாமியம்மன் கோயில்
Ambalavanan Sivakami Amman Temple
ஆகமம்
சிவாகமம்
பூசைக்காலம்
காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் சிறப்புப் பூசைகள் உண்டு.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டுச் சடங்குகளில் பால், தயிர், பச்சரிசி மாவு, இளநீர், சந்தனம், பன்னீர் போன்றவை அபிஷேகத்திற்கும் நைவேத்தியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் பல துண்டுக்கல்வெட்டுகளில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை, குளம் தானமளிக்கப்பட்ட செய்திகள், நில விற்பனை, சுந்தர பாண்டியன் என்னும் மன்னன் பெயர், சோமநாத ஈஸ்வரம் என்னும் கோயில் பெயர், பெரும்பள்ளி, பள்ளிச் சந்தம் ஆகிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்த நிலதானக் கல்வெட்டுகளில் பாண்டிய அரசு அலுவலர்கள் பலர் கையொப்பம் இட்டுள்ளனர்.
தல வரலாறு / கதைகள்
இராவணனின் மனைவி மண்டோதரி இத்தலத்தில் அமைந்துள்ள சிவனிடம் தவம் செய்து, இராவணனைக் கரம் பிடித்ததாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இக்கோயிலைத் திங்கள் தோறும் வணங்கி வந்தால் பெண்களுக்கான களத்திர தோஷம் (திருமணத்தடை) நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் சூரியபகவானே ஆண்டுக்கு ஒரு நாள் சிவராத்திரி அன்று நேரடியாக இக்கோயில் சிவனைத் தரிசனம் செய்வதாகவும் இத்தல புராணத்தில் கூறப்படுகின்றது.
கோயில் அமைப்பு
விமானம், கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், நந்தி மண்டபம் மற்றும் தட்சிணாமூர்த்தி சந்நிதி, முருகன் சந்நிதி, விநாயகர் சந்நிதி போன்ற கட்டுமானங்கள் காணப்படுகின்றன.
சுருக்கம்
மதில் சுவரால் சூழப்பட்ட இந்தச் சிவன் கோயிலில் மூன்று அடுக்கு விமானம், கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், நந்தி மண்டபம், தட்சிணாமூர்த்தி சந்நிதி, முருகன் சந்நிதி, விநாயகர் சந்நிதி ஆகியன அமைந்துள்ளன. இது பிற்காலப் பாண்டியரால் கட்டப்பட்ட சிவன் கோயில் என்பதை இங்குக் காணப்படும், பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு, கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. இக்கோயில் வளாகத்தில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை கடந்தகால திருப்பணியின் போது மாற்றியமைக்கப்பட்டதால் கல்வெட்டுச் செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இங்கு “அருளாளப் பெருமாள்” என்ற பெயரும் கல்வெட்டொன்றில் காணப்படுகிறது. இதன் மூலம் இவ்வூரில் ஒரு பெருமாள் கோவிலும் இருந்திருக்கலாம் என்றறிய முடிகின்றது.
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சூரனூர் சிவன் கோயில்
செல்லும் வழி
காரியாபட்டியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலையில் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரியாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரியாபட்டி
மீடியா கோப்புகள் இல்லை
No media Files