அருள்மிகு மதனகோபால சுவாமி கோயில்
Madanagopala Swamy Temple
பிற தெய்வத்தின் பெயர்கள்
பாமா, ருக்மணி
அமைவிடம்
மேற்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதிச் சந்திப்பில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
இசையில் நாட்டம் உடையவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் இசை மேதை ஆகலாம் என்றும், இத்திருத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்புப் பெறும் என்றும் கூறுகிறார்கள்.
ஊர்
மதுரை கிழக்கு
மாவட்டம்
மதுரை
மூலவர் பெயர்
மதனகோபால சுவாமி
தல மரம்
வாழைமரம்.
ஆகமம்
பாஞ்சராத்ர ஆகமம்.
பூசைக்காலம்
1. பொங்கல் பூசை - காலை 8:30 மணி முதல் காலை 9 மணி வரை.
2. உச்சிக் காலப் பூசை - நண்பகல் 12 மணி முதல் 12:30 மணி வரை.
3. சாயரட்சை பூசை - மாலை 6:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை.
4. பள்ளியறைப் பூசை - இரவு 9 மணி முதல் 9:15 மணி வரை.
திருவிழாக்கள் விவரங்கள்
கோயிலில் மாதந்தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது. அவற்றுள் முக்கியமானவை ஆவணியில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) கிருஷ்ண ஜெயந்தி; வைகுண்ட ஏகாதசி; மார்கழியில் (டிசம்பர் - ஜனவரி) பாவை நோன்பு.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
அபிஷேகம், புஷ்பங்கள், வாசனைத் திரவியங்கள், தீபங்கள், நிவேத்தியம், பிரசாதம் முறைகளில் வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறுகின்றன. இங்குள்ள நாகர், ஹரிஹர ஸர்ப்ப ராஜா என்று அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளிதோறும் ராகு காலப் பூசை சிறப்பாகச் செய்யப்படுகிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்தப் பூசை செய்தால் தோஷம் விலகும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் கருவறையின் மேற்கு அதிட்டான குமுதத்தில் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலக் கல்வெட்டாகும். இது தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. கல்வெட்டில் திருக்கோயிலுக்குத் தானம் வழங்கப்பட்ட விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
சிற்பங்கள்
இக்கோயிலில் ஐந்து சிற்பங்கள் காணப்படுகின்றன.
1. மதனகோபால சுவாமி
2. பாமா
3. ருக்மணி
4. மதுரவல்லித் தாயார்
5. ஆண்டாள்.
தல வரலாறு / கதைகள்
ஓரு சமயம் சிவபெருமான் கடுந்தவம் மேற்கொண்ட பொழுது எழுந்த அக்னி தேவலோகத்தையே எரிக்கத் தொடங்கியதாம். தேவர்கள் பாதுகாப்பு வேண்டித் திருமாலிடம் சரணடைந்தனர். சிவனின் தியானத்தைக் கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. திருமால் தேவர்களைக் காக்கத் திருவுள்ளம் இரங்கி, இத்தலத்தில் கோபாலனாக எழுந்ருளித் தன் புல்லாங்குழலை இசைத்தார். அந்த இசையைக் கேட்டுச் சிவபெருமானின் தபசு குறைந்தது, பின்னர் மீனாட்சி அம்மனை மணந்து கோபாலனைத் தொழுது சென்றனர் என்று செவிவழிச் செய்தி கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
அருள்மிகு மதனகோபால் திருக்கோயில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் பல்வேறு புராணக் காட்சிகளும் சிற்பங்களும் அலங்கரிக்கப்பட்டுக் காணப்படுகின்றன.
இந்தக் கோயிலில் கலசங்கள் காணப்படுகின்றன. பிரதானக் கருவறையில் மதன கோபால சுவாமி, பாமா, ருக்மணி ஆகியோரின் சிலைகள் உள்ளன, அதே நேரத்தில் மதுரவல்லித் தாயாருக்கும் ஒரு தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
மதனகோபால சுவாமி கோயில் பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1912 இல், அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியாவைச் சேர்ந்த திரு. அட்லைன் பெப்பர்கிப்சன் என்பவர் மதுரையில் உள்ள மதன கோபால சுவாமி கோயிலுக்கு வந்தார். 1938 இல், பிலடெல்பியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் மதன கோபால சுவாமி கோயிலில் இருந்து தனது நாட்டிற்கு அவர் எடுத்துச் சென்ற பாழடைந்த கல் தூண்களைப் பயன்படுத்தி ஒரு மண்டபத்தைக் கட்டினார்.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில்.
செல்லும் வழி
மதுரை நகரத்தின் மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதிச் சந்திப்பில், பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்.
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்.
மீடியா கோப்புகள் இல்லை
No media Files