அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்
Teppakulam Mariamman Temple
பூசைக்காலம்
காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் பிரமோற்சவத் திருவிழாவும், பூச்சொரிதல் திருவிழாவும், இக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களாக உள்ளன. தெப்பத் திருவிழாவின் போது மீனாட்சியம்மனை இங்குள்ள தெப்பத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்திற்குக் கொண்டுவந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
அம்மனின் அருளால் வேண்டிய செயல்கள் நிறைவேற, அம்மனுக்குத் தீச்சட்டி, பால்குடம், மாவிளக்குகள் போன்ற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு, குழந்தை தத்துக்கொடுத்து வாங்கி, மண்சிலைகள் வழங்கி, கரும்புத்தொட்டில்கள் கட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மேலும், கிடாய் வெட்டிப் படைத்தல், அங்கப் பிரதட்சிணம், முடி இறக்குதல், அலகு குத்துதல், உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளின் மூலம் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
சுருக்கம்
மதுரையிலுள்ள தெப்பக் குளக்கரையில் இந்தப் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் மாரியம்மனாக இருப்பினும், இங்குப் பேச்சியம்மனுக்கும் தனிச் சந்நிதி உள்ளது. கருவறையின் நுழைவாயிலில் இரண்டு பெண் வாயிற் காவலர்கள் (துவாரபாலகிகள்) சிற்பங்கள் உள்ளன. தெப்பத்திருவிழாவின் போது மீனாட்சியம்மனை இங்குள்ள தெப்பக்குளத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்திற்குக் கொண்டுவந்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
கூடுதல் விவரங்கள்
மன்னர் திருமலை நாயக்கரின் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இந்த இடத்தை மன்னர் அப்படியே தெப்பக்குளமாக்கி விட்டார். மிகப்பெரிய தெப்பக் குளத்தின் மைய மண்டபத்தில் ஒரு விநாயகர் கோவிலும் உள்ளது. இந்தக் கோயில் குளம் நான்கு புறமும் கிரானைட் படிகளால் சூழப்பட்டுள்ளது, இந்தத் தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. நிலத்தடிக் கால்வாய்கள் வழியாக வைகை ஆற்று நீர் தெப்பத்திற்குள் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலம்/ ஆட்சியர்
1645ம் ஆண்டு கால வாக்கில், திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
தெப்பக்குளம் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெப்பக்குளம் பேருந்து நிலையம், அண்ணா நகர் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை சந்திப்பு
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files