Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

காஞ்சரை கருப்பு கோயில்

Kāñcharai Karuppu Temple

மூலவர் பெயர்

காஞ்சரை கருப்பு


தல மரம்

அரசமரம்


பூசைக்காலம்

வாரம் இரு நாட்கள் பூசை நடைபெறும்.


ஊர்

கல்லம்பட்டி

மாவட்டம்

மதுரை

திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி பொங்கல், சித்திரை மாதம் மரியாதை நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
குதிரை எடுப்பு, முளைப்பாரி, விரதம் இருத்தல்
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
பூதகனங்கள், காவல் தெய்வங்கள் மற்றும் குதிரைச் சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் கருப்பு சாமியின் சிற்பம் காணப்படுகிறது.
சுருக்கம்
படிக்கட்டுகளுடன் கூடிய சுவர்கள் இல்லாத சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் கருப்பு சாமியின் சிற்பம் காணப்படுகிறது. பீடத்தின் மேல் நிற்கும் கருப்புசாமி முறுக்கு மீசையுடன் கையில் அரிவாள் மற்றும் கதை வைத்துள்ளார். இம்மண்டபத்தின் அருகில் ஒரு பீடத்தின் மேல் பலிபீடம், விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் அருகில் ஒரு சிறிய குளம் காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் திருவிழா ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் செட்டிகுண்டு கண்மாயிலிருந்து குதிரை சிலைகள் செங்குன்றம் ஐய்யன் கோயிலுக்கு கொண்டு வரப்படுகின்றன. இக்கோயிலுக்கு ஐந்து அம்பலக்காரர்கள் உள்ளனர். இவர்கள் கோயிலின் பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர். குதிரை எடுப்பு திருவிழாவின் பொழுது அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகின்றது. இதே போல ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புரட்டாசி பொங்கல் விழாவும் நடத்தப்படுகின்றது. இவ்விழாவின் பொழுது கருப்பண்ண சாமி சிலையைத் தூக்கி வைக்கும் நிகழ்விற்கு பின், முளைப்பாரி எடுக்கப்பட்டு, இசை கொட்டி, இறுதியாக அவை (முளைப்பாரி) ஆற்றில் கறைக்கப் படுகின்றன. பாரிவேட்டையின் (குறிப்பிட்ட விலங்குகளை வேட்டையாடி பலி கொடுத்தல்) பொழுது மேளம் அடிக்கும் பழக்கமும் இவர்களிடையே கடைபிடிக்கப்படுகிறது. பண நெருக்கடி மற்றும் இதர காரணங்களால் வருடா வருடம் கோயில் திருவிழாவை நடத்த முடியாமல் போகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

குறிப்புகள்
முதியவர் திரு. மாயாண்டி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி குடைவரை கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் திருச்சி நெடுஞ்சாலை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை

மீடியா கோப்புகள் இல்லை

No media Files