பூர்ண புஷ்கலா சமேத ஐயனார் கோயில்
Purna Pushkala and Ayyanar Temple
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கும்மிகொட்டுதல், முளைப்பாரி
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கோயில் வளாகம் முழுவதும் சூடு மண்ணால் செய்யப்பட்ட பல குதிரைகள், காவல் தெய்வங்கள், சப்த கன்னிமார்கள், சிலைகள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் நான்கு தூண்கள் கொண்ட முகமண்டப அமைப்பையுடைய, அண்மைக்காலக் கோயில்
சுருக்கம்
இக்கோயிலில் படிகளுடன் கூடிய நான்கு தூண்களை கொண்ட முகம் மண்டபமும் சிறிய கருவறையும் உள்ளது. கருவறையில் ஒரு பீடத்தின் மேல் அய்யனார் மற்றும் பூர்ணா புஷ்கலா என்ற இரு பெண் தெய்வங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இக்கருவறையில் பலிபீடம் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட கருப்புசாமி சிலையும் வைக்கப்பட்டுள்ளன.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மேலூர் காஞ்சிவனம் கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் திருச்சி நெடுஞ்சாலை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files