குடைவரை சிவன் கோயில்
Rock-cut Sivan Temple
பூசைக்காலம்
மூன்று காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி வழிபாடு நடைபெறும்.
சிற்பங்கள்
லகுலீசர் திருவுருவமும், வலம்புரி விநாயகரின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகக் குகை முகப்பில் அமைந்துள்ளன. கருவறைக்கு வெளியில் நந்தியும் உள்ளது.
கோயில் அமைப்பு
குடைவரைக்கோயில். கருவறை உள்ளது மற்றும் முகப்பில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 7-8ஆம் நூற்றாண்டு
தல வரலாறு / கதைகள்
இந்தக் குடைவரைக் கோயில் சிவபெருமானுக்காக எடுக்கப்பட்ட கோவிலாகும். இக்கோயில் பொது ஆண்டு 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்காலக் குடைவரைக் கோவிலாகும். இங்குத் தாய்ப்பாறையில் வெட்டப்பட்ட சிவலிங்கம் உள்ளது. கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் வாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறைக்கு வெளியில் நந்தியும் உள்ளது. லகுலீசர் திருவுருவமும், வலம்புரி விநாயகரின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகக் குகை முகப்பில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மிக அரிதாகக் காணப்படும் லகுலீசர் சிற்பம் இவ்விடத்தில் அமைத்துள்ளது. லகுலீசர் என்பவர் சைவ உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தை முறைப்படுத்தித் தம் சீடர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பியவர் ஆவார். இவர் பொது ஆண்டு 2ஆம் நூற்றாண்டில் குஜராத்தில் காயோரோவன் (கார்வான்) என்ற இடத்தில் பிறந்தார் எனச் சிலரால் கருதப்படுகிறது. இச்சமயம் பிற்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவம் பெற்றது.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு, மாங்குளம் தமிழி கல்வெட்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரிட்டாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files