அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
Prasanna Venkatachalapathi Temple
பிற தெய்வத்தின் பெயர்கள்
ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆண்டாள்
தலத்தின் சிறப்பு
பொதுவாகப் பெருமாள் கோயில்களில் பெருமாள் கிழக்கே அமைந்திருப்பார், ஆனால் திருவரங்கம் கோயிலில் பெருமாள் தெற்கு நோக்கி இருப்பதுபோல, மதுரையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் பெருமாளும் தெற்கு நோக்கி இருப்பது மிகச் சிறப்புடையதாகும். இக்கோயிலில் திருப்பதிக் கோயிலுக்கு நிகராகப் பூசைகள் நடப்பது சிறப்புடையதாகும். இங்குள்ள சுயம்பு ஆஞ்சநேயர் உக்கிர ஆஞ்சநேயராகக் கருதப்படுகிறார்.
மூலவர் பெயர்
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி
ஊர்
தல்லாகுளம்
மாவட்டம்
மதுரை
பூசைக்காலம்
அதிகாலை 5.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வேண்டிய காரியங்கள் நிறைவேறிடப் பிரசன்ன வெங்கடாசலபதிக்குப் புஷ்ப அங்கிகள் சாத்தப்பட்டுச் சிறப்பு அபிஷேகங்களும், நைவேத்தியங்களும் படைக்கப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகள் சாத்தப்படுகின்றன. விவசாயம், வியாபாரத்தில் மேன்மை கண்டவர்கள் நெல், சோளம், கம்பு, கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களையும் நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 16-17ஆம் நூற்றாண்டு; திருமலை நாயக்கர்
சிற்பங்கள்
ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆண்டாள், ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் துவார பாலகர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் மன்னர் திருமலை நாயக்கரின் கனவில் இறைவன் தோன்றித் தனக்கு ஆலயம் ஒன்று அமைக்கும்படி கூறியதால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சுருக்கம்
பிரசன்ன வெங்கடேச பெருமாளின் வலப்புறம் ஶ்ரீதேவியும், இடப்புறம் பூமாதேவியும் காட்சியளிக்கின்றனர். உற்சவராக சீனிவாசர் காட்சியளிக்கிறார். இவர்களைத் தவிர, உக்கிர ஆஞ்சநேயர், அர்த்த மண்டபத்தில் ஸ்ரீனிவாச பெருமாள், அவருக்கு எதிர்ப்புறத்தில் சக்கரத்தாழ்வார், கொடிமரத்துக்கு அருகில் கருடாழ்வார் மற்றும் சந்நிதியில் ஆண்டாள் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் அழகர் கோவிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. மதங்களைக் கடந்த சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை நடக்கும் அன்றிரவு கள்ளழகர் இங்கே வந்து தங்கி மறுநாள் அதிகாலையில் வைகையாற்றில் எழுந்தருளக் கிளம்புவார்.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
தமுக்கம் மைதானம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தமுக்கம் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files