கருப்பண்ணசாமி கோயில்
Karuppannasamy Temple
மூலவர் பெயர்
கருப்பசாமி
பூசைக்காலம்
வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
கள்ளழகர் எதிர்சேவையின் போது இந்தக் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதும். கள்ளழகர் பூப்பல்லக்கின்போது இந்தக் கோயிலில் வைத்துத்தான் அலங்காரம் செய்யப்படுவார். இந்த வழக்கம் காலங்காலமாக நடந்து வருகிறது. விழாவின் பகுதியாகப் பாரிவேட்டையும் நடைபெறுகிறது. ஆடி அமாவாசை மற்றும் மகா சிவராத்திரி சிறப்பு நாட்களில் வழிபாடு நடைபெறும்.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கருப்பண்ணசாமி, சோணை சுவாமி, ராக்காயி ஆகிய மூன்று தெய்வங்கள் உள்ளன.
சுருக்கம்
தல்லாகுளம் கருப்புசாமி கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பொது ஆண்டு 1862ஆம் ஆண்டு பெரியண்ணன் பூசாரியின் மகன் சோலைமலைப் பூசாரி அவர்களால் எழுப்பப்பட்டது. கருப்பண்ணசாமி தவிர மதுரையின் காவல் தெய்வமான சோனையா மற்றும் அழகர்கோயில் மலையின் மேல் அமைந்துள்ள ராக்காயி அம்மன் திருவுருவம் ஆகியன இக்கோயிலில் அமைந்துள்ளன. இந்தக் கோவிலை எழுப்பிய சோலைமலைப் பூசாரியின் சிலையும் அவர் வளர்த்த நாய் மற்றும் பூனையின் பீடமும் இந்தக் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் முக்கிய விழாவான பாரிவேட்டையின்போது சுற்று வட்டார மக்கள் அனைவரும் ஒன்றுகூடிக் கருப்பண்ணசாமியின் அருள் பெறுவார்கள். சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர், எதிர்சேவை முடிந்தபின் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்குவார். மறுநாள் காலையில் ராஜா அலங்காரத்துடன் வெளியே வந்து இந்தத் தல்லாகுளம் கருப்பசாமி கோயிலில் மரியாதை செலுத்தி விட்டு வைகை ஆற்றில் எழுந்தருளச் செல்வார். எனவே, நாயக்கர் காலத்தில் இருந்தே இக்கோயில் முக்கியத்துவத்துடன் விளங்குகிறது. இன்றும் தொன்றுதொட்டுப் பழைமை மாறாதவண்ணம் மக்கள் இவ்வழிபாட்டைக் கடைப்பிடித்து வருகின்றனர். தல்லாக்குளம் கருப்பன்ணசாமி கோயில் ஆற்றங்கரையில் இருப்பதால் இப்பகுதியைப் பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1862
தல வரலாறு / கதைகள்
முற்காலத்தில் இவ்விடத்தில் கருப்பண்ணசாமியை அரிவாள் வடிவாக மட்டுமே மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதன்பின் சிங்க வாகனத்தில் கையில் அரிவாளுடன் காட்சியளிக்கும் ’முத்துக் கருப்பண்ணசாமி’ இந்தக் கோயிலின் மூலவராக இருந்துள்ளார். இவர் கோபம் மிகுந்த சாமி. ஒரு சமயம், தம்மை அவமதித்த ஆங்கிலேய துரையின் பார்வையை இந்த முத்துக் கருப்பண்ணசாமி பறித்தார் என்றும், இதன் காரணமாக மூலவரான முத்துக் கருப்பண்ணசாமியின் கோபத்தைக் குறைக்க இவரை வலப்புறத்துக்கு மாற்றி ’சப்பரத்தடி கருப்பண்ணசாமியை’ மூலவராக மாற்றினர் என்று கோயில் வரலாறு கூறுகிறது.
தகவல்
முனைவர் துர்கா தேவி
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
தமுக்கம் மைதானம்,காந்தி அருங்காட்சியகம், திருவாப்புடையார் கோயில்.
செல்லும் வழி
கோரிப்பாளையம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தல்லாகுளம் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் சந்திப்பு
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
மீடியா கோப்புகள் இல்லை
No media Files