கன்னிமார் கோயில்
Kannimaar Temple (Temple of the Virgin goddesses)
திருவிழாக்கள் விவரங்கள்
கோயில் உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் திருவிழா நாட்களை முடிவு செய்கின்றனர்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இந்த தெய்வத்தை வழிபடுபவர்களின் குடும்பத்தில் குழந்தைகள் பிறந்தால், அவர்களின் முதல் தலைமுடி காணிக்கையை இந்த தெய்வத்திற்கு கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
அண்மைக்காலக் கும்பாபிஷேகக் கல்வெட்டு ஒன்று உள்ளது.
சிற்பங்கள்
சப்த கன்னிமார் தெய்வங்களின் சிற்பம் மற்றும் விநாயகர் சிற்பம் உள்ளது.
தல வரலாறு / கதைகள்
இந்த வழிபாட்டுத்தளம் சுமார் 400 வருடம் பழைமையானதாக இவ்வூர் மக்களால் கருதப்படுகிறது. இந்த சப்த கன்னிமார் நல்லதங்காள் என்ற தெய்வத்துடன் இவ்விடத்திற்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாகக் கோயில்
சுருக்கம்
படிக்கட்டுகளுடன் கூடிய குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழிபாட்டுத்தலத்தில் பீடம் போன்ற அமைப்பின் மேல், மூலவரான சப்த கன்னிமார் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் மற்றொரு பீடத்தின் மேல் விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறந்த வெளி வழிபாட்டுத் தளமாகும்.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி குடைவரை கோயில்
செல்லும் வழி
மதுரை முதல் மேலூர் செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
மீடியா கோப்புகள் இல்லை
No media Files